• Nov 26 2024

இலங்கையிலிருந்து குரங்குகளை வாங்கும் ஆர்வத்தை கைவிடாத சீனா..! அமைச்சர் வெளியிட்ட தகவல்

Chithra / Jan 10th 2024, 9:55 am
image

 

இலங்கையில் இருந்து குரங்குகளை பெற்றுக்கொள்வதில் சீனா இன்னும் ஆர்வமாக இருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் அமரவீர, 

தனது சமீபத்திய சீன விஜயத்தின் போது, சீனாவின் தனியார் மிருகக்காட்சிசாலை நிறுவனங்கள் இலங்கை டோக் மக்காக் குரங்குகளைப் பெறுவதற்கான நம்பிக்கையை வெளியிட்டதாக தெரிவித்தார்.

தனியார் சீன மிருகக்காட்சிசாலை நிறுவனங்கள் இன்னும் கண்காட்சி நோக்கங்களுக்காக இலங்கை குரங்குகளைப் பெறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

சீனாவில் சுமார் 20,000 தனியார் உயிரியல் பூங்காக்கள் உள்ளன. 

இருப்பினும், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் நடவடிக்கைகளால் எங்களால் அது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியவில்லை என்றார்.

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையிலிருந்து குரங்குகளை வாங்கும் ஆர்வத்தை கைவிடாத சீனா. அமைச்சர் வெளியிட்ட தகவல்  இலங்கையில் இருந்து குரங்குகளை பெற்றுக்கொள்வதில் சீனா இன்னும் ஆர்வமாக இருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் அமரவீர, தனது சமீபத்திய சீன விஜயத்தின் போது, சீனாவின் தனியார் மிருகக்காட்சிசாலை நிறுவனங்கள் இலங்கை டோக் மக்காக் குரங்குகளைப் பெறுவதற்கான நம்பிக்கையை வெளியிட்டதாக தெரிவித்தார்.தனியார் சீன மிருகக்காட்சிசாலை நிறுவனங்கள் இன்னும் கண்காட்சி நோக்கங்களுக்காக இலங்கை குரங்குகளைப் பெறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.சீனாவில் சுமார் 20,000 தனியார் உயிரியல் பூங்காக்கள் உள்ளன. இருப்பினும், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் நடவடிக்கைகளால் எங்களால் அது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியவில்லை என்றார்.இலங்கை குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement