• Jan 05 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மக்களுக்கு சீன அரசின் உதவி

Chithra / Dec 29th 2024, 11:29 am
image

 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மக்களுக்கு, மக்கள் சீன குடியரசினால்  நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இன்று    நடைபெற்றது.

'சீன அரசாங்கத்தின் சகோதர பாசம்' என்ற தொனிப் பொருளின் கீழ் இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.

முதற்கட்டமாக, இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா, மூதூர் மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்களுக்கு 700 பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதனை, மக்கள் சீன குடியரசின் இலங்கைக்கான தூதுவர் H.E.கிய் சேன்ஹொங் (H. E. Qi Zhenhong) பிரதமாக அதிதியாக கலந்து கொண்டு வழங்கிவைத்தார்.

இதன்போது, மக்கள் சீன குடியரசின் இலங்கைக்கான தூதுவர் தெரிவிக்கையில், 

இங்குள்ள மக்களையும், அரச அதிகாரிகளையும் எங்களுடன் இணைத்துக் கொள்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு 2000 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். 

மக்கள் சீன குடியரசின் நோக்கம் வடகிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும். இது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி மாத்திரமே.

நீண்ட காலமாக மக்களுக்கான உதவிகளை இங்கு செய்து வருகின்றோம். கோவிட் காலத்தில் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்கி உதவிகளை செய்தோம்.

கிழக்கு மாகாணத்துக்கு 2475 மில்லியன் ரூபா பெறுமதியான வெள்ள நிவாரணம், உதவியாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாங்கள் திருகோணமலைக்கு வந்தபோது கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்துக்காக 8 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தோம் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளர், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர், கிண்ணியா பிரதேச செயலாளர், மூதூர் பிரதேச செயலாளர், தம்பலாகமம் பிரதேச செயலாளர், குச்சவெளி மற்றும் சேருவில உதவிப் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மக்களுக்கு சீன அரசின் உதவி  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மக்களுக்கு, மக்கள் சீன குடியரசினால்  நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.இந் நிகழ்வு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இன்று    நடைபெற்றது.'சீன அரசாங்கத்தின் சகோதர பாசம்' என்ற தொனிப் பொருளின் கீழ் இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.முதற்கட்டமாக, இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா, மூதூர் மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்களுக்கு 700 பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.இதனை, மக்கள் சீன குடியரசின் இலங்கைக்கான தூதுவர் H.E.கிய் சேன்ஹொங் (H. E. Qi Zhenhong) பிரதமாக அதிதியாக கலந்து கொண்டு வழங்கிவைத்தார்.இதன்போது, மக்கள் சீன குடியரசின் இலங்கைக்கான தூதுவர் தெரிவிக்கையில், இங்குள்ள மக்களையும், அரச அதிகாரிகளையும் எங்களுடன் இணைத்துக் கொள்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு 2000 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். மக்கள் சீன குடியரசின் நோக்கம் வடகிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும். இது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி மாத்திரமே.நீண்ட காலமாக மக்களுக்கான உதவிகளை இங்கு செய்து வருகின்றோம். கோவிட் காலத்தில் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்கி உதவிகளை செய்தோம்.கிழக்கு மாகாணத்துக்கு 2475 மில்லியன் ரூபா பெறுமதியான வெள்ள நிவாரணம், உதவியாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாங்கள் திருகோணமலைக்கு வந்தபோது கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்துக்காக 8 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தோம் என்று தெரிவித்தார்.இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளர், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர், கிண்ணியா பிரதேச செயலாளர், மூதூர் பிரதேச செயலாளர், தம்பலாகமம் பிரதேச செயலாளர், குச்சவெளி மற்றும் சேருவில உதவிப் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement