கொழும்பில், தனது முன்னாள் காதலியைத் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய 26 வயதுடைய சீன இளைஞனை, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்தின் போது மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த 29 வயதுடைய லியு யி ஹான் (Liu Yi Han) என்ற சீன மாணவி, கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City) பணியாற்றும் மற்றொரு சீன இளைஞருடன் காதலில் இருந்துள்ளார்.
களுபோவில, பீரிஸ் குடியிருப்பில் இருந்த தனது உடமைகளை எடுக்க மாணவி தனது புதிய காதலருடன் சென்ற போது, முன்னாள் காதலன் இருவரையும் கத்தியால் சரமாரியாகக் குத்தி தப்பியோடியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ,தடுக்க வந்து படுகாயமடைந்த மற்றைய சீன இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கடந்த 14 நாட்களாகக் பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடி வந்த அந்த இளைஞன், இன்று காலை கொழும்பு தர்மபால மாவத்தையில் பதுங்கியிருந்த போது சுற்றி வளைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
முன்னால் காதலியை கொன்று தலைமறைவாகிய சீனக் காதலன்-14 நாட்களுக்குப் பின் கைது கொழும்பில், தனது முன்னாள் காதலியைத் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய 26 வயதுடைய சீன இளைஞனை, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.குறித்த சம்பவத்தின் போது மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த 29 வயதுடைய லியு யி ஹான் (Liu Yi Han) என்ற சீன மாணவி, கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City) பணியாற்றும் மற்றொரு சீன இளைஞருடன் காதலில் இருந்துள்ளார்.களுபோவில, பீரிஸ் குடியிருப்பில் இருந்த தனது உடமைகளை எடுக்க மாணவி தனது புதிய காதலருடன் சென்ற போது, முன்னாள் காதலன் இருவரையும் கத்தியால் சரமாரியாகக் குத்தி தப்பியோடியுள்ளார்.இந்தத் தாக்குதலில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ,தடுக்க வந்து படுகாயமடைந்த மற்றைய சீன இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கடந்த 14 நாட்களாகக் பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடி வந்த அந்த இளைஞன், இன்று காலை கொழும்பு தர்மபால மாவத்தையில் பதுங்கியிருந்த போது சுற்றி வளைக்கப்பட்டார்.கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.