லங்கா சதொச விற்பனை நிலையங்களில் ஏற்பட்டுள்ள தற்காலிகப் பொருட்கள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்து சேமித்து வருகின்றனர்.
இந்தத் திடீர் தேவையால் சதொசவின் சில கிளைகளில் தற்காலிகமாகப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லங்கா சதொசவின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் இஷார கொடமன்ன தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தைக் கருத்திற்கொண்டு போதுமான அளவு பொருட்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
விலைமனு நடைமுறைகள் காரணமாக விநியோகத்தில் சிறு காலதாமதம் ஏற்பட்டிருந்தாலும், இன்று (10) மற்றும் நாளை (11) கிளைகளுக்குத் தேவையான பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்துள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
லங்கா சதொசவில் பொருட்களுக்கு தட்டுப்பாடா - வெளியான முக்கிய அறிவிப்பு லங்கா சதொச விற்பனை நிலையங்களில் ஏற்பட்டுள்ள தற்காலிகப் பொருட்கள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்து சேமித்து வருகின்றனர்.இந்தத் திடீர் தேவையால் சதொசவின் சில கிளைகளில் தற்காலிகமாகப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லங்கா சதொசவின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் இஷார கொடமன்ன தெரிவித்துள்ளார்.பண்டிகைக் காலத்தைக் கருத்திற்கொண்டு போதுமான அளவு பொருட்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. விலைமனு நடைமுறைகள் காரணமாக விநியோகத்தில் சிறு காலதாமதம் ஏற்பட்டிருந்தாலும், இன்று (10) மற்றும் நாளை (11) கிளைகளுக்குத் தேவையான பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்துள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.