• Apr 17 2026

தலதா மாளிகையை சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை படம்பிடித்த சீனப் பிரஜை கைது

Chithra / Sep 16th 2025, 2:04 pm
image

  

ஸ்ரீ தலதா மாளிகையைச் சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை அனுமதியின்றி ட்ரோன் மூலம் படம்பிடித்த சீனப் பிரஜை ஒருவரை ஸ்ரீ தலதா மாளிகை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று இரவு (15) சுமார் 7.00 மணியளவில் தியவடன நிலமேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகிலிருந்து 48 வயதான சீனப் பிரஜை இந்தக் காணொளியை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஸ்ரீ தலதா மாளிகையின் மீது பறந்து கொண்டிருந்த ட்ரோன், ஜாமர் கருவிகளைப் பயன்படுத்தி விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. 

மேலும் தலதா மாளிகை பொலிஸார் சீனப் பிரஜையையும், ட்ரோனையும் மேலதிக விசாரணைக்காக கண்டி சுற்றுலா காவல் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தலதா மாளிகையை சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை படம்பிடித்த சீனப் பிரஜை கைது   ஸ்ரீ தலதா மாளிகையைச் சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை அனுமதியின்றி ட்ரோன் மூலம் படம்பிடித்த சீனப் பிரஜை ஒருவரை ஸ்ரீ தலதா மாளிகை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு (15) சுமார் 7.00 மணியளவில் தியவடன நிலமேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகிலிருந்து 48 வயதான சீனப் பிரஜை இந்தக் காணொளியை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஸ்ரீ தலதா மாளிகையின் மீது பறந்து கொண்டிருந்த ட்ரோன், ஜாமர் கருவிகளைப் பயன்படுத்தி விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. மேலும் தலதா மாளிகை பொலிஸார் சீனப் பிரஜையையும், ட்ரோனையும் மேலதிக விசாரணைக்காக கண்டி சுற்றுலா காவல் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement