யாழ்ப்பாண இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைகளுக்காக இரத்த வகைகள் சேகரிக்கப்பட்டு யாழ்ப்பாண இரத்த வங்கியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.
இரத்ததான முகாம்களை பல இடங்களில் நடத்தியும் நடமாடும் சேவையூடாக இரத்த தான முகாம்களை நடத்தியும் இரத்த வகைகளை சேகரித்து வருகின்றனர்.
அவ்வாறு சேகரிக்கப்பட்டும் சிகிச்சைகளுக்கு தற்போது போதுமான அளவில் இரத்தம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே எல்லா வகை இரத்தத்திற்கும் இரத்த வங்கியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் இரத்த வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன் இரத்த தானம் செய்ய விரும்புவோர்களை 0772105375 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறும் அறிவித்துள்ளனர்.
யாழ்.இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு யாழ்ப்பாண இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக இரத்த வகைகள் சேகரிக்கப்பட்டு யாழ்ப்பாண இரத்த வங்கியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது. இரத்ததான முகாம்களை பல இடங்களில் நடத்தியும் நடமாடும் சேவையூடாக இரத்த தான முகாம்களை நடத்தியும் இரத்த வகைகளை சேகரித்து வருகின்றனர். அவ்வாறு சேகரிக்கப்பட்டும் சிகிச்சைகளுக்கு தற்போது போதுமான அளவில் இரத்தம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே எல்லா வகை இரத்தத்திற்கும் இரத்த வங்கியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் இரத்த வங்கி அறிவித்துள்ளது. அத்துடன் இரத்த தானம் செய்ய விரும்புவோர்களை 0772105375 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறும் அறிவித்துள்ளனர்.