• Nov 23 2024

மாலைத்தீவு கடல் பரப்பில் சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி - இந்தியா கடும் அழுத்தம்...!samugammedia

Anaath / Jan 4th 2024, 1:51 pm
image

சீன அறிவியல் ஆய்வுக் கப்பலான சியாங் யாங் ஹாங் 3  என்ற ஆய்வுக்கப்பலானது இந்த மாத இறுதியில் மாலைத்தீவில் நங்கூர மிட திட்டமிடப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில்  எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மாலைத்தீவு வெளியுறவு அமைச்சக தரப்புக்கள் வெளியிட்டுள்ளன. 

அத்துடன், அண்மையில் பதவியேற்ற ஜனாதிபதி மொஹமட் முய்ஸு சீன ஆராய்ச்சிக் கப்பலுக்கு உளவு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்து அதற்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதன்படி, சீனக்கப்பல், ஜனவரி முதல் தெற்கு இந்தியப் பெருங்கடலில் "ஆழமான நீர் ஆய்வு" நடத்த திட்டமிட்டுள்ளது.

முன்னதாக இந்த கப்பல் கொழும்பு நிறுத்த அனுமதி கோரியிருந்தது. ஆனால் அந்த கோரிக்கையை இலங்கை நிராகரித்து விட்டது.

இதேவேளை, மாலைத்தீவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ஜனாதிபதி முய்ஸு இந்த மாத இறுதியில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விஜயத்தின் விபரங்கள் அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் இந்தக்கப்பலினை மாலைதீவு கடலில் நிலை நிறுத்துவதற்கு இந்தியத் தரப்பிலிருந்து கடும் ஆட்சேபனை நிலவி வருகின்றது.

மாலைத்தீவு கடல் பரப்பில் சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி - இந்தியா கடும் அழுத்தம்.samugammedia சீன அறிவியல் ஆய்வுக் கப்பலான சியாங் யாங் ஹாங் 3  என்ற ஆய்வுக்கப்பலானது இந்த மாத இறுதியில் மாலைத்தீவில் நங்கூர மிட திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில்  எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மாலைத்தீவு வெளியுறவு அமைச்சக தரப்புக்கள் வெளியிட்டுள்ளன. அத்துடன், அண்மையில் பதவியேற்ற ஜனாதிபதி மொஹமட் முய்ஸு சீன ஆராய்ச்சிக் கப்பலுக்கு உளவு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்து அதற்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்படி, சீனக்கப்பல், ஜனவரி முதல் தெற்கு இந்தியப் பெருங்கடலில் "ஆழமான நீர் ஆய்வு" நடத்த திட்டமிட்டுள்ளது.முன்னதாக இந்த கப்பல் கொழும்பு நிறுத்த அனுமதி கோரியிருந்தது. ஆனால் அந்த கோரிக்கையை இலங்கை நிராகரித்து விட்டது.இதேவேளை, மாலைத்தீவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ஜனாதிபதி முய்ஸு இந்த மாத இறுதியில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை அறிவித்துள்ளார்.எவ்வாறாயினும், இந்த விஜயத்தின் விபரங்கள் அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை.இந்நிலையில் இந்தக்கப்பலினை மாலைதீவு கடலில் நிலை நிறுத்துவதற்கு இந்தியத் தரப்பிலிருந்து கடும் ஆட்சேபனை நிலவி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement