• Nov 21 2024

கொழும்பை வந்தடைந்த சீனப் போர்க் கப்பல்! கூட்டு பயிற்சியில் இலங்கை கடற்படை

Chithra / Oct 9th 2024, 11:05 am
image

 

சீன இராணுவத்திற்கு சொந்தமான பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலானது  உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்நிலையில் சம்பிரதாயப்பூர்வமாக சீன கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பளித்தனர்.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சீன இராணுவ பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலானது 86 மீற்றர் நீளமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன இராணுவ கடற்படையின் 35 அதிகாரிகள் உட்பட 130 சிப்பாய்கள் குறித்த கப்பலில் இலங்கை வந்துள்ளனர். 

இதேவேளை சீன கப்பலின் கட்டளை அதிகாரி மாஹ வெங்யோங், இலங்கை கடற்படையின் மேற்கு கட்டளை அதிகாரி ரியர் அத்மிரால் சிந்தக குமாரசிங்கசை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று இருதரப்பு கூட்டு பயிற்சி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளன.

அத்துடன் இலங்கையின் சிறப்புமிக்க கடற் பகுதிகளுக்கும் குறித்த சீன கப்பல் விஜயம் மேற்கொள்ள உள்ளதுடன், வெள்ளிக்கிழமை இலங்கையிலிருந்து வெளியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பை வந்தடைந்த சீனப் போர்க் கப்பல் கூட்டு பயிற்சியில் இலங்கை கடற்படை  சீன இராணுவத்திற்கு சொந்தமான பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலானது  உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.இந்நிலையில் சம்பிரதாயப்பூர்வமாக சீன கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பளித்தனர்.கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சீன இராணுவ பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலானது 86 மீற்றர் நீளமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சீன இராணுவ கடற்படையின் 35 அதிகாரிகள் உட்பட 130 சிப்பாய்கள் குறித்த கப்பலில் இலங்கை வந்துள்ளனர். இதேவேளை சீன கப்பலின் கட்டளை அதிகாரி மாஹ வெங்யோங், இலங்கை கடற்படையின் மேற்கு கட்டளை அதிகாரி ரியர் அத்மிரால் சிந்தக குமாரசிங்கசை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போன்று இருதரப்பு கூட்டு பயிற்சி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளன.அத்துடன் இலங்கையின் சிறப்புமிக்க கடற் பகுதிகளுக்கும் குறித்த சீன கப்பல் விஜயம் மேற்கொள்ள உள்ளதுடன், வெள்ளிக்கிழமை இலங்கையிலிருந்து வெளியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement