• Apr 19 2026

கலவரத்தில் முடிந்த சித்திரைப் புத்தாண்டு விழா; கடும் மோதல் - ஏழு பேர் காயம்

Chithra / Apr 19th 2026, 11:46 am
image

புத்தளம் - ஆனமடுவ, கரம்பேவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு விழாவின்போது ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் காயமடைந்துள்ள நிலையில்  ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த புத்தாண்டு விழாவிற்கு வருகை தந்திருந்த இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 


பழைய பகைமை காரணமாக இந்த அமைதியற்ற நிலை ஏற்பட்டதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுமார் 20 பேர் வரை இந்த மோதலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கலவரத்தில் முடிந்த சித்திரைப் புத்தாண்டு விழா; கடும் மோதல் - ஏழு பேர் காயம் புத்தளம் - ஆனமடுவ, கரம்பேவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு விழாவின்போது ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் காயமடைந்துள்ள நிலையில்  ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த புத்தாண்டு விழாவிற்கு வருகை தந்திருந்த இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பழைய பகைமை காரணமாக இந்த அமைதியற்ற நிலை ஏற்பட்டதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுமார் 20 பேர் வரை இந்த மோதலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement