கொழும்பு - மஹரகமவில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரு ஆண்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக மாவத்தை, இரண்டாவது குறுக்கு ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த 55 வயதுடைய பெண் மற்றும் அவரது 16 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான தந்தை மற்றும் வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அயலவர்கள் உடனடியாகச் செயல்பட்டுத் தீயை அணைத்து, காயமடைந்த இரு ஆண்களையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் வீட்டைச் சோதனையிட்ட போது, அறையொன்றுக்குள் தாயும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல் நடந்த இடத்தில் பெட்ரோல் வாடை வீசியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வீட்டிற்கு தீ வைத்து மர்ம நபர்கள் வெறிச்செயல் - தாயும் மகளும் பலி இருவர் படுகாயம் கொழும்பு - மஹரகமவில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரு ஆண்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக மாவத்தை, இரண்டாவது குறுக்கு ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த 55 வயதுடைய பெண் மற்றும் அவரது 16 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான தந்தை மற்றும் வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அயலவர்கள் உடனடியாகச் செயல்பட்டுத் தீயை அணைத்து, காயமடைந்த இரு ஆண்களையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் வீட்டைச் சோதனையிட்ட போது, அறையொன்றுக்குள் தாயும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல் நடந்த இடத்தில் பெட்ரோல் வாடை வீசியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.