• Apr 17 2026

கூர்மையான கத்தியால் மெதுவாக வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வராது!

shanu / Nov 5th 2025, 10:24 am
image

கூர்மையான கத்தியால் மெதுவாக வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வர மாட்டாது என்று விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.


சமையலறையில் சுவிங்கம் மென்று கொண்டே வெங்காயம் நறுக்குதல், வெங்காயத்தை முன்கூட்டியே குளிரவைத்தல், அல்லது கத்தியை எலுமிச்சை சாற்றால் துடைத்தல் என பல வழிகள் பின்பற்றப்படுகின்றன.


இதனால் கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க ஒரு எளிய வழி மட்டுமே உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக  அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானி நவீத் ஹூஷாங்கிநெஜாத் தெரிவிக்கையில், 


வெங்காயத்தை நறுக்கும் போது ஏற்படும் வாசனை வாயுக்கள், துளிகள் போலவே காற்றில் பரவுவதை கவனித்தோம். அதன்பின், ஆய்வுக்குழு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெங்காயங்களை பல மாதங்களாக நறுக்கி, உயர் வேக கேமராவில் அந்த செயல்முறையை பதிவு செய்தது.


கத்தி எவ்வளவு கூர்மையானது அல்லது மந்தமானது, எவ்வளவு வேகத்தில் நறுக்கப்படுகிறது என்பதையெல்லாம் ஒப்பிட்டு, எந்த முறையில் கண்ணீர் குறைவாக வருகிறது என்பதை ஆராய்ந்தனர்.


வேகமாக நறுக்கும்போது, கத்தியில் அதிக கைனெடிக் சக்தி உருவாகி, வெங்காய சாறு துளிகள் வேகமாக காற்றில் பறக்கின்றன.


மந்தமான கத்தி பயன்படுத்தினால், வெங்காயத்தின் அடியில் அதிக அழுத்தம் உருவாகி, பெரிய அளவு சாறு திடீரென பீறிட்டு வெளிவந்து கண்ணில் புகும் வாய்ப்பு அதிகமாகிறது.


ஆனால் கூர்மையான கத்தி பயன்படுத்தி மெதுவாக நறுக்கினால், சாறு வெளியேறுவது குறைந்து, கண்ணீர் வருவது மிகக் குறையும்.


வெங்காயத்தின் அளவு, அடுக்கு எத்தனை நீக்கப்பட்டுள்ளன. எது முதல் எது வரை நறுக்கப்படுகிறது போன்ற அம்சங்களும் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அவை இன்னும் ஆராய்ச்சியில் உள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


எனவே கூர்மையான கத்தியைப் பயன்படுத்தி, மெதுவாக வெங்காயம் நறுக்குங்கள். அப்போது கண்ணீர் வராது என்பது ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கூர்மையான கத்தியால் மெதுவாக வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வராது கூர்மையான கத்தியால் மெதுவாக வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வர மாட்டாது என்று விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.சமையலறையில் சுவிங்கம் மென்று கொண்டே வெங்காயம் நறுக்குதல், வெங்காயத்தை முன்கூட்டியே குளிரவைத்தல், அல்லது கத்தியை எலுமிச்சை சாற்றால் துடைத்தல் என பல வழிகள் பின்பற்றப்படுகின்றன.இதனால் கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க ஒரு எளிய வழி மட்டுமே உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக  அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானி நவீத் ஹூஷாங்கிநெஜாத் தெரிவிக்கையில், வெங்காயத்தை நறுக்கும் போது ஏற்படும் வாசனை வாயுக்கள், துளிகள் போலவே காற்றில் பரவுவதை கவனித்தோம். அதன்பின், ஆய்வுக்குழு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெங்காயங்களை பல மாதங்களாக நறுக்கி, உயர் வேக கேமராவில் அந்த செயல்முறையை பதிவு செய்தது.கத்தி எவ்வளவு கூர்மையானது அல்லது மந்தமானது, எவ்வளவு வேகத்தில் நறுக்கப்படுகிறது என்பதையெல்லாம் ஒப்பிட்டு, எந்த முறையில் கண்ணீர் குறைவாக வருகிறது என்பதை ஆராய்ந்தனர்.வேகமாக நறுக்கும்போது, கத்தியில் அதிக கைனெடிக் சக்தி உருவாகி, வெங்காய சாறு துளிகள் வேகமாக காற்றில் பறக்கின்றன.மந்தமான கத்தி பயன்படுத்தினால், வெங்காயத்தின் அடியில் அதிக அழுத்தம் உருவாகி, பெரிய அளவு சாறு திடீரென பீறிட்டு வெளிவந்து கண்ணில் புகும் வாய்ப்பு அதிகமாகிறது.ஆனால் கூர்மையான கத்தி பயன்படுத்தி மெதுவாக நறுக்கினால், சாறு வெளியேறுவது குறைந்து, கண்ணீர் வருவது மிகக் குறையும்.வெங்காயத்தின் அளவு, அடுக்கு எத்தனை நீக்கப்பட்டுள்ளன. எது முதல் எது வரை நறுக்கப்படுகிறது போன்ற அம்சங்களும் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அவை இன்னும் ஆராய்ச்சியில் உள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே கூர்மையான கத்தியைப் பயன்படுத்தி, மெதுவாக வெங்காயம் நறுக்குங்கள். அப்போது கண்ணீர் வராது என்பது ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement