• Nov 24 2024

தீவிரமாகப் பரவும் லம்பி தோல் நோய் - அதிகரிக்கும் உயிர் இழப்புக்கள்

Chithra / Jun 10th 2024, 5:40 pm
image

 

நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான பகுதிகளில் லம்பி தோல் நோய் எனும் ஒரு வகை பெரியம்மை நோய் மாடுகளைப் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த நோயானது மாடுகளின் உடல் முழுதும் சிறியது முதல் பெரியது வரையான வீக்கங்களை உருவாக்கி உள்ளதாகவும், இந்த நோய் கடந்த முறையை விட மாறுபட்ட விதத்தில் சற்று வீரியத்துடன் மாடுகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கால்நடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பொருளாதாரம் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இறப்பு வீதத்தை ஏற்படுத்தும் நோயாகவும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்பட்ட மழையுடனான காலநிலையின் பின்னர் நுளம்புகள் ஏனைய பூச்சிகளின் பெருக்கம் அதிகரிப்பு காரணமாக குறித்த நோய் தீவிரமாகப் பரவலடைந்துள்ளதாக மிருக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நோய் அதிகளவு பசு மாடுகளையும் குறைவான அளவில் எருமை மாடுகளையும் தாக்குகிறது என தெரிவித்துள்ளனர்.

அதிகமானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை பார்ப்பதனால் மாட்டிறைச்சி உண்பதை விரும்பாத நிலையும் பால் குடிக்காமல் விடும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் கால்நடை உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


தீவிரமாகப் பரவும் லம்பி தோல் நோய் - அதிகரிக்கும் உயிர் இழப்புக்கள்  நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான பகுதிகளில் லம்பி தோல் நோய் எனும் ஒரு வகை பெரியம்மை நோய் மாடுகளைப் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.குறித்த நோயானது மாடுகளின் உடல் முழுதும் சிறியது முதல் பெரியது வரையான வீக்கங்களை உருவாக்கி உள்ளதாகவும், இந்த நோய் கடந்த முறையை விட மாறுபட்ட விதத்தில் சற்று வீரியத்துடன் மாடுகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கால்நடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் பொருளாதாரம் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இறப்பு வீதத்தை ஏற்படுத்தும் நோயாகவும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்பட்ட மழையுடனான காலநிலையின் பின்னர் நுளம்புகள் ஏனைய பூச்சிகளின் பெருக்கம் அதிகரிப்பு காரணமாக குறித்த நோய் தீவிரமாகப் பரவலடைந்துள்ளதாக மிருக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நோய் அதிகளவு பசு மாடுகளையும் குறைவான அளவில் எருமை மாடுகளையும் தாக்குகிறது என தெரிவித்துள்ளனர்.அதிகமானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை பார்ப்பதனால் மாட்டிறைச்சி உண்பதை விரும்பாத நிலையும் பால் குடிக்காமல் விடும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் கால்நடை உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement