பண மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரொருவரை கைது செய்வதற்காக மிரிஹான பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஊடாக இங்கிலாந்து மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடியே 75 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த பண மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் தலைமையின் கீழ் இந்த பண மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பிரதான சந்தேக நபரான தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் புகைப்படமொன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அறியத்தருமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.
0718591643 அல்லது 0718137373 என்ற மிரிஹான பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கோடிக்கணக்கில் பண மோசடி - பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார் பண மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரொருவரை கைது செய்வதற்காக மிரிஹான பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஊடாக இங்கிலாந்து மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடியே 75 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த பண மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் தலைமையின் கீழ் இந்த பண மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.இதனையடுத்து, பிரதான சந்தேக நபரான தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் புகைப்படமொன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அறியத்தருமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.0718591643 அல்லது 0718137373 என்ற மிரிஹான பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.