முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேமசிங்கவிடம் இருந்த சொகுசு ஜீப் ரக வாகனத்தை நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது.
குறித்த ஜீப் ரக வாகனத்தைப் பொறுப்பேற்று நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு – கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி பிறப்பித்த உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சொகுசு ரக வாகனம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் 2010 ஆம் ஆண்டு அனுமத்திரத்துடன் கொண்டுவரப்பட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாகப் பதிவு செய்யப்படாது பயன்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் அந்த ஜீப் ரக வாகனம் மதவாச்சியில் வைத்து பொலிஸ் அதிகாரியுடன் மோதுண்டது.
அது தொடர்பான வழக்கொன்றும் மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
பின்னர், கடந்த 7 ஆம் திகதி குறித்த வாகனம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனசிங்கவின் கொழும்பில் உள்ள வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுஜீவ சேமசிங்கவின் சொகுசு ஜீப் ரக வாகனம் CIDயினரால் பொறுப்பேற்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேமசிங்கவிடம் இருந்த சொகுசு ஜீப் ரக வாகனத்தை நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது. குறித்த ஜீப் ரக வாகனத்தைப் பொறுப்பேற்று நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு – கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி பிறப்பித்த உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சொகுசு ரக வாகனம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் 2010 ஆம் ஆண்டு அனுமத்திரத்துடன் கொண்டுவரப்பட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாகப் பதிவு செய்யப்படாது பயன்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் அந்த ஜீப் ரக வாகனம் மதவாச்சியில் வைத்து பொலிஸ் அதிகாரியுடன் மோதுண்டது. அது தொடர்பான வழக்கொன்றும் மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. பின்னர், கடந்த 7 ஆம் திகதி குறித்த வாகனம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனசிங்கவின் கொழும்பில் உள்ள வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.