• Apr 05 2025

மரக்கறி சந்தைக்கு பூட்டு போட்டு பூட்டிய நகரசபை: பருத்தித்துறை வர்த்தகர்கள் பகிஷ்கரிப்பு..!

Sharmi / Apr 3rd 2025, 2:29 pm
image

பருத்தித்துறையில் இதுவரை இயங்கி வந்த மரக்கறிச் சந்தைக்கு பருத்தித்துறை நகரசபையால் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறையில் இதுவரை இயங்கிவந்த மரக்கறிச் சந்தையை சுமார் 200 மீற்றருக்கு அருகில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான அறிவித்தல் நேற்றைய தினம் மரக்கறிச் சந்தை பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது.

அந்தவகையில் குறித்த மரக்கறி சந்தை,  புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்படவிருந்த நிலையில் இன்றைய தினம் மரக்கறி சந்தை வியாபாரிகள் வியாபாரத்தை பகிஷ்கரிப்பதாக அறிவித்திருந்த நிலையில், இன்று அதிகாலையில் இருந்து நேற்றுவரை இயங்கிவந்த சந்தை கட்டிடம் நகரசபையால் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வியாபாரிகள் தமது பொருட்களை பழைய சந்தைக்குள்ளிருந்து வெளியே எடுத்துவர முடியாத நிலையில் உள்ளனர்.

இதேவேளை ஒரு சில மரக்கறி  வர்த்தகர்கள் புதிய சந்தை கட்டிட தொகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய சந்தைக்கு மரக்கறி வியாபரத்தை மேற்கொள்ளுமாறு சில மாதங்களுக்கு முன்னர் பருத்தித்துறை நகரசபையால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை எதிர்த்து மரக்கறி வர்த்தகர்களால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 20/06/2025 அன்று வழக்கு தவணையிடப்பட்டுள்ள நிலையிலேயே பருத்தித்துறை நகரசபையால் நேற்றைய தினம் திடீரென அறிவித்தல் ஒட்டப்பட்டும், ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டும் இன்றைய தினம்  மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு  இடமாற்றம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டமையால் அதிகமான மரக்கறி வியாபாரிகள் வியாபாரம் நடவடிக்கையிலிருந்து விலகியிருப்பதுடன் ஒரு சில வர்த்தகர்கள் புதிய கட்டிட தொகுதியில் வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய மரக்கறி சந்தை அமைந்துள்ள பகுதி தற்போதுவரை இயங்கிவந்த சந்தையிலிருந்து சுமார் 200மீட்டர் தொலைவில் உள்ளது. அது ஒரு ஒருவழிப்பாதை ஆகும். 

அவ் வீதியில் மீன்சந்தைக்கு செல்கின்றபோது போக்குவரத்து நெரிசல், தரிப்பிட வசதி குறைவுகள் ஏற்கனவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.







மரக்கறி சந்தைக்கு பூட்டு போட்டு பூட்டிய நகரசபை: பருத்தித்துறை வர்த்தகர்கள் பகிஷ்கரிப்பு. பருத்தித்துறையில் இதுவரை இயங்கி வந்த மரக்கறிச் சந்தைக்கு பருத்தித்துறை நகரசபையால் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பருத்தித்துறையில் இதுவரை இயங்கிவந்த மரக்கறிச் சந்தையை சுமார் 200 மீற்றருக்கு அருகில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான அறிவித்தல் நேற்றைய தினம் மரக்கறிச் சந்தை பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது.அந்தவகையில் குறித்த மரக்கறி சந்தை,  புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்படவிருந்த நிலையில் இன்றைய தினம் மரக்கறி சந்தை வியாபாரிகள் வியாபாரத்தை பகிஷ்கரிப்பதாக அறிவித்திருந்த நிலையில், இன்று அதிகாலையில் இருந்து நேற்றுவரை இயங்கிவந்த சந்தை கட்டிடம் நகரசபையால் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாபாரிகள் தமது பொருட்களை பழைய சந்தைக்குள்ளிருந்து வெளியே எடுத்துவர முடியாத நிலையில் உள்ளனர்.இதேவேளை ஒரு சில மரக்கறி  வர்த்தகர்கள் புதிய சந்தை கட்டிட தொகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.புதிய சந்தைக்கு மரக்கறி வியாபரத்தை மேற்கொள்ளுமாறு சில மாதங்களுக்கு முன்னர் பருத்தித்துறை நகரசபையால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை எதிர்த்து மரக்கறி வர்த்தகர்களால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 20/06/2025 அன்று வழக்கு தவணையிடப்பட்டுள்ள நிலையிலேயே பருத்தித்துறை நகரசபையால் நேற்றைய தினம் திடீரென அறிவித்தல் ஒட்டப்பட்டும், ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டும் இன்றைய தினம்  மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு  இடமாற்றம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டமையால் அதிகமான மரக்கறி வியாபாரிகள் வியாபாரம் நடவடிக்கையிலிருந்து விலகியிருப்பதுடன் ஒரு சில வர்த்தகர்கள் புதிய கட்டிட தொகுதியில் வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.புதிய மரக்கறி சந்தை அமைந்துள்ள பகுதி தற்போதுவரை இயங்கிவந்த சந்தையிலிருந்து சுமார் 200மீட்டர் தொலைவில் உள்ளது. அது ஒரு ஒருவழிப்பாதை ஆகும். அவ் வீதியில் மீன்சந்தைக்கு செல்கின்றபோது போக்குவரத்து நெரிசல், தரிப்பிட வசதி குறைவுகள் ஏற்கனவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement