• Jul 04 2025

AI அடிப்படையிலான உள்நாட்டு மொழிபெயர்ப்பு மென்பொருள் விரைவில் அறிமுகம்

Chithra / Jul 4th 2025, 1:42 pm
image

 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவிக்கையில், 

இந்த மென்பொருளை மொரட்டுவை பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள், தனியார் துறையுடன் இணைந்து உருவாக்க ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.

இந்த மென்பொருள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் பொதுமக்களின் பயன்பாடுகளுக்கு கிடைக்கும்.

புதிய மென்பொருளானது  சிங்கள உள்ளடக்கத்தை கொண்ட குரல் பதிவுகளை சில நொடிகளில் தமிழில் மொழிபெயர்க்கும் திறனைக் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

AI அடிப்படையிலான உள்நாட்டு மொழிபெயர்ப்பு மென்பொருள் விரைவில் அறிமுகம்  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவிக்கையில், இந்த மென்பொருளை மொரட்டுவை பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள், தனியார் துறையுடன் இணைந்து உருவாக்க ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.இந்த மென்பொருள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் பொதுமக்களின் பயன்பாடுகளுக்கு கிடைக்கும்.புதிய மென்பொருளானது  சிங்கள உள்ளடக்கத்தை கொண்ட குரல் பதிவுகளை சில நொடிகளில் தமிழில் மொழிபெயர்க்கும் திறனைக் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement