• Sep 20 2024

சாகும் நிலையில் அரச ஊழியர்கள்; இந்த நாட்டில் சுதந்திரம் இருக்கா? – கேள்வி எழுப்பிய ஜேசப் ஸ்டானின்

Chithra / Feb 7th 2023, 5:22 pm
image

Advertisement

அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு காரணமாக அரச ஊழியர்கள் இந்த நாட்டில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜேசப் ஸ்டானின் தெரிவித்துள்ளார்.

கொமுப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அனைத்து பொருட்களின் விலைகளும் தற்போது அதிகரித்துள்ளதாகவும், ஆனால் தற்போது கடன் வரிகளும் அதிகரித்துள்ள நிலையில் அரச ஊழியர்களினால் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள முக்கால்வாசி அரச ஊழியர்கள் வங்கிகளின் கடன்களை பெற்றுள்ளதாகவும் எனவே அரசாங்கம் தற்போது முறையற்ற வரிக்கொள்கையால்  கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜேசப் ஸ்டானின் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான சம்பளங்களை பெறுகின்றவர்களிடமிருந்து அரசாங்கம் வரிகளை அறவிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் பேசும் சுதந்திரம் இல்லை, எனவும் போக்குவரத்து சுதந்திரம் இல்லை, போராடுவதற்காக சுதந்திரமும் இல்லை என தெரிவித்த ஜேசப் ஸ்டானின் இந்த நாட்டில் சுதந்திரம் இருக்கா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாகும் நிலையில் அரச ஊழியர்கள்; இந்த நாட்டில் சுதந்திரம் இருக்கா – கேள்வி எழுப்பிய ஜேசப் ஸ்டானின் அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு காரணமாக அரச ஊழியர்கள் இந்த நாட்டில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜேசப் ஸ்டானின் தெரிவித்துள்ளார்.கொமுப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அனைத்து பொருட்களின் விலைகளும் தற்போது அதிகரித்துள்ளதாகவும், ஆனால் தற்போது கடன் வரிகளும் அதிகரித்துள்ள நிலையில் அரச ஊழியர்களினால் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டிலுள்ள முக்கால்வாசி அரச ஊழியர்கள் வங்கிகளின் கடன்களை பெற்றுள்ளதாகவும் எனவே அரசாங்கம் தற்போது முறையற்ற வரிக்கொள்கையால்  கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜேசப் ஸ்டானின் குறிப்பிட்டுள்ளார்.தற்போது நாட்டில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான சம்பளங்களை பெறுகின்றவர்களிடமிருந்து அரசாங்கம் வரிகளை அறவிடுவதாக அவர் குறிப்பிட்டார்.தற்போது நாட்டில் பேசும் சுதந்திரம் இல்லை, எனவும் போக்குவரத்து சுதந்திரம் இல்லை, போராடுவதற்காக சுதந்திரமும் இல்லை என தெரிவித்த ஜேசப் ஸ்டானின் இந்த நாட்டில் சுதந்திரம் இருக்கா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement