அம்பலாங்கொடையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு துப்பாக்கிதாரியால் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொடை குருந்துவத்த - அந்ததோல வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.
அம்பலாங்கொடையில் இன்றைய தினம் காலை கடை ஒன்றின் முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரும் குற்றக் கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றக் கும்பல்களிடையே மோதல்; சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு அம்பலாங்கொடையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு துப்பாக்கிதாரியால் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அம்பலாங்கொடை குருந்துவத்த - அந்ததோல வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.அம்பலாங்கொடையில் இன்றைய தினம் காலை கடை ஒன்றின் முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரும் குற்றக் கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.