நிட்டம்புவ – தங்கொல்லவத்த பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த முதியவருக்கும் அவரது மகளின் கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த முதியவர் வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மேல் தங்கொல்லவத்தை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்திற்குள் வெடித்த மோதல்; மாமனாருக்கு நேர்ந்த விபரீதம் மருமகன் தலைமறைவு நிட்டம்புவ – தங்கொல்லவத்த பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.உயிரிழந்த முதியவருக்கும் அவரது மகளின் கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.தாக்குதலில் படுகாயமடைந்த முதியவர் வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் மேல் தங்கொல்லவத்தை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.இதனையடுத்து, தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 26 வயதுடைய மருமகன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.