• Nov 25 2024

காந்தக்காட்டில் ஏற்பட்ட மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது..!samugammedia

Tharun / Jan 13th 2024, 7:02 pm
image

வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே நிலவிய அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

குறித்த விடயம் தொடர்பில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதுடன், இன்று காலையும் இளைஞர்களுக்கு இடையில் சற்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலையீட்டினால் மோதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

நேற்று பிற்பகல் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் மதிய உணவு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையின் அடிப்படையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 90 கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன், 72 கைதிகள் சரணடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 26 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும், மூன்று பேர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தக்காட்டில் ஏற்பட்ட மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.samugammedia வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே நிலவிய அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விடயம் தொடர்பில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதுடன், இன்று காலையும் இளைஞர்களுக்கு இடையில் சற்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.எனினும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலையீட்டினால் மோதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று பிற்பகல் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் மதிய உணவு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையின் அடிப்படையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.சுமார் 90 கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன், 72 கைதிகள் சரணடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.சம்பவத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 26 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும், மூன்று பேர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement