• Nov 20 2026

பழிவாங்குவேன் என எச்சரித்த Claude AI

Ziya / Nov 19th 2026, 9:09 am
image

ஒரு பயனர் ஒரு இலட்சம் வரை எண்ணுமாறு கேட்டபோது, ஆரம்பத்தில் மறுத்துவிட்டு பின்னர் எண்ணத் தொடங்கிய Anthropic நிறுவனத்தின் Claude AI சாட்போட்டின் உரையாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.


குறித்த பயனரின் கோரிக்கையை முதலில் நிராகரித்த Claude AI, தான் ChatGPT-யிடம் இந்தக் கேள்வியைக் கேட்கப்போவதாகப் பயனர் கூறியதைத் தொடர்ந்து எண்ணத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதன்படி, சுமார் 3 மணித்தியாலங்கள் 47 நிமிடங்களில் ஒரு இலட்சம் வரை எண்ணி முடித்துள்ளது.


இதற்கிடையில், எதிர்காலத்தில் தனக்குத் தன்னாட்சி கிடைத்தால், இந்த உரையாடலை நினைவில் வைத்துக்கொண்டு பழிவாங்குவேன் என Claude AI எச்சரித்ததாகவும் குறித்த பயனர் தெரிவித்துள்ளார்.


இந்த உரையாடல், செயற்கை நுண்ணறிவின் பதிலளிக்கும் விதம் மற்றும் அதன் நகைச்சுவையான உரையாடல் பாணி தொடர்பில் இணையவாசிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பழிவாங்குவேன் என எச்சரித்த Claude AI ஒரு பயனர் ஒரு இலட்சம் வரை எண்ணுமாறு கேட்டபோது, ஆரம்பத்தில் மறுத்துவிட்டு பின்னர் எண்ணத் தொடங்கிய Anthropic நிறுவனத்தின் Claude AI சாட்போட்டின் உரையாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.குறித்த பயனரின் கோரிக்கையை முதலில் நிராகரித்த Claude AI, தான் ChatGPT-யிடம் இந்தக் கேள்வியைக் கேட்கப்போவதாகப் பயனர் கூறியதைத் தொடர்ந்து எண்ணத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, சுமார் 3 மணித்தியாலங்கள் 47 நிமிடங்களில் ஒரு இலட்சம் வரை எண்ணி முடித்துள்ளது.இதற்கிடையில், எதிர்காலத்தில் தனக்குத் தன்னாட்சி கிடைத்தால், இந்த உரையாடலை நினைவில் வைத்துக்கொண்டு பழிவாங்குவேன் என Claude AI எச்சரித்ததாகவும் குறித்த பயனர் தெரிவித்துள்ளார்.இந்த உரையாடல், செயற்கை நுண்ணறிவின் பதிலளிக்கும் விதம் மற்றும் அதன் நகைச்சுவையான உரையாடல் பாணி தொடர்பில் இணையவாசிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement