• Mar 18 2025

கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தும் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் ஆரம்பம்

Chithra / Feb 16th 2025, 11:29 am
image

கடற்கரை பகுதிகளை  சுத்தப்படுத்தும் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் ஆரம்பம் 

 

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் "அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுளாத்தளம்" எனும் தொணிப் பொருளின் மூதூர் பிரதேசத்திலுள்ள கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வின் பிரதான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை மூதூர் -ஹபீப் நகர் கடற்கரையில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலையில் இடம்பெற்றது.

இன்றைய சிரமதானமானது மூதூரிலுள்ள கடற்கரைப் பகுதி 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 12.5 கிலோ மீற்றர் தூரமுள்ள கடற்கரை பகுதியானது  துப்பரவு செய்யப்பட்டது.

மூதூர் பிரதேச சபை, மூதூர் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இவ் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

மூதூர் வலயக் கல்வி அலுவலகம்,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, முப்படையினர், மீன்பிடி திணைக்களம், பிரதேச சமூக அமைப்புக்கள் என மூதூர் பிரதேசத்திலுள்ள சகல அரச நிருவனங்களின் ஒத்துழைப்போடு இவ் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச சபையின்  மூதூர் பிரதேச செயலாளர், மூதூர் பிரதேச சபையின் செயலாளர்,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி,பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இரானுவ உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.



இதேவெளை கீளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுமார் 15 கடற்கரை பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டது.

கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை இணைந்து முன்னெடுத்த இச் சுத்தப்படுத்தும் நிகழ்வின் பிரதான நிகழ்வு கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் முன்பாக உள்ள கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.டி.எம் ராபி பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் பொலிஸ், விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள்,சிவில் அமைப்பினர்கள் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


அத்தோடு “சுத்தமான கடற்கரை - கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையை அன்மித்த பிரதேசங்களை சுத்தம் செய்யும் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் குருக்கள்மடம் , செட்டிபாளையம், பெரியகல்லாறு கடற்கரைப் பிரதேசம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

சுற்றுலா பயணிகள் அதிகம் கூடுகின்ற கடற்கரை பகுதிகளில் காணப்படுகின்ற சுற்றாடலுக்கு பாதிக்கின்ற பொருட்களை அப்புறப்படுத்தி அழகுப்படுத்தும் பணிகள் இங்கு முன்னெடுக்கப்பட்டன.


கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தும் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் ஆரம்பம் கடற்கரை பகுதிகளை  சுத்தப்படுத்தும் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் ஆரம்பம்  கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் "அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுளாத்தளம்" எனும் தொணிப் பொருளின் மூதூர் பிரதேசத்திலுள்ள கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வின் பிரதான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை மூதூர் -ஹபீப் நகர் கடற்கரையில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலையில் இடம்பெற்றது.இன்றைய சிரமதானமானது மூதூரிலுள்ள கடற்கரைப் பகுதி 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 12.5 கிலோ மீற்றர் தூரமுள்ள கடற்கரை பகுதியானது  துப்பரவு செய்யப்பட்டது.மூதூர் பிரதேச சபை, மூதூர் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இவ் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.மூதூர் வலயக் கல்வி அலுவலகம்,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, முப்படையினர், மீன்பிடி திணைக்களம், பிரதேச சமூக அமைப்புக்கள் என மூதூர் பிரதேசத்திலுள்ள சகல அரச நிருவனங்களின் ஒத்துழைப்போடு இவ் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச சபையின்  மூதூர் பிரதேச செயலாளர், மூதூர் பிரதேச சபையின் செயலாளர்,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி,பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இரானுவ உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.இதேவெளை கீளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுமார் 15 கடற்கரை பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டது.கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை இணைந்து முன்னெடுத்த இச் சுத்தப்படுத்தும் நிகழ்வின் பிரதான நிகழ்வு கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் முன்பாக உள்ள கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்றது.கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.டி.எம் ராபி பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.மேலும் இந் நிகழ்வில் பொலிஸ், விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள்,சிவில் அமைப்பினர்கள் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.அத்தோடு “சுத்தமான கடற்கரை - கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையை அன்மித்த பிரதேசங்களை சுத்தம் செய்யும் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் குருக்கள்மடம் , செட்டிபாளையம், பெரியகல்லாறு கடற்கரைப் பிரதேசம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.சுற்றுலா பயணிகள் அதிகம் கூடுகின்ற கடற்கரை பகுதிகளில் காணப்படுகின்ற சுற்றாடலுக்கு பாதிக்கின்ற பொருட்களை அப்புறப்படுத்தி அழகுப்படுத்தும் பணிகள் இங்கு முன்னெடுக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement