• Sep 19 2024

கிளப் வசந்த படுகொலை- மற்றுமொரு சந்தேக நபர் கைது..!

Sharmi / Aug 7th 2024, 8:39 am
image

Advertisement

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் படுகொலை செய்யப்பட்டு நால்வர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு அதிவேக வீதியின் சேவா சதுக்கத்தில் வைத்து நேற்றையதினம்(06) மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அதுருகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தர்கா நகரை சேர்ந்த 36 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

குற்றச் செயலுக்கு முன்னர், இரு துப்பாக்கிச் சூட்டுக்காரர்களையும், ஆயுதங்களையும் அம்பலாங்கொட பிரதேசத்தில் இருந்து அத்துருகிரிய பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கு வாடகை வீடொன்றையும் வாடகை வண்டியையும் பெற்றுக்கொடுக்க சந்தேகநபர் ஏற்பாடு செய்திருந்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய பேருந்து கதிர்காமம் பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அதனை நேற்று பொலிஸ் காவலில்  எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளப் வசந்த படுகொலை- மற்றுமொரு சந்தேக நபர் கைது. கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் படுகொலை செய்யப்பட்டு நால்வர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.தெற்கு அதிவேக வீதியின் சேவா சதுக்கத்தில் வைத்து நேற்றையதினம்(06) மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அதுருகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தர்கா நகரை சேர்ந்த 36 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.குற்றச் செயலுக்கு முன்னர், இரு துப்பாக்கிச் சூட்டுக்காரர்களையும், ஆயுதங்களையும் அம்பலாங்கொட பிரதேசத்தில் இருந்து அத்துருகிரிய பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கு வாடகை வீடொன்றையும் வாடகை வண்டியையும் பெற்றுக்கொடுக்க சந்தேகநபர் ஏற்பாடு செய்திருந்தமை தெரியவந்துள்ளது.இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய பேருந்து கதிர்காமம் பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அதனை நேற்று பொலிஸ் காவலில்  எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement