• Feb 12 2026

இலங்கையில் முடங்கிய சுகாதார சேவைகள்; ஏழைகளுக்கு இலவச மருத்துவ வசதி இல்லையா? நோயாளிகள் விசனம்!

Chithra / Jan 23rd 2026, 12:35 pm
image


​சுகாதார அமைச்சினால் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை அமுல்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் கிழக்கு மாகாணம் உட்பட நாடு தழுவிய ரீதியில் சுகாதார சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.


​கிண்ணியா தள வைத்தியசாலையிலும் இன்று காலை முதல் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதன் காரணமாக வெளிநோயாளர் பிரிவு (OPD) மற்றும் கிளினிக் சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன. 


எனினும், உயிராபத்தான நிலையில் உள்ள நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவைகள் மாத்திரம் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.


​கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வந்த பிராந்திய ரீதியிலான பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று நண்பகல் 2.00 மணியுடன் நிறைவடைந்திருந்தது. இதனால் இன்று வழமை போல் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வருகை தந்த நோயாளிகள், நாடு தழுவிய ரீதியிலான புதிய போராட்ட அறிவிப்பால் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகினர்.


​தூர இடங்களில் இருந்து அதிகாலை வேளையிலேயே வருகை தந்த நோயாளிகள், சிகிச்சை அளிக்கப்படாததைக் கண்டு கவலையுடன் வீடு திரும்பினர்.


நாங்கள் தொடர்ச்சியாக வைத்தியசாலைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்புகிறோம். ஒருமுறை வந்து செல்ல போக்குவரத்துக்காக மட்டும் 2,000 முதல் 3,000 ரூபாய் வரை செலவாகிறது. நாங்கள் ஏழைகள். இந்த நாட்டில் ஏழைகளுக்கு இலவச மருத்துவ வசதி இல்லையா? எமது நிலையை கருத்திற்கொண்டு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ​பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தெரிவித்தனர். 



இதேவேளை, தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று 48 மணிநேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையினால் வைத்திய சேவை பெற வருகைதந்த நோயாளர்கள் அவதியுற்றதை அவதானிக்க முடிந்தது.


அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியது.


வைத்தியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவு, மேலதிகநேர கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிபுரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


இலங்கையில் முடங்கிய சுகாதார சேவைகள்; ஏழைகளுக்கு இலவச மருத்துவ வசதி இல்லையா நோயாளிகள் விசனம் ​சுகாதார அமைச்சினால் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை அமுல்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் கிழக்கு மாகாணம் உட்பட நாடு தழுவிய ரீதியில் சுகாதார சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.​கிண்ணியா தள வைத்தியசாலையிலும் இன்று காலை முதல் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வெளிநோயாளர் பிரிவு (OPD) மற்றும் கிளினிக் சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன. எனினும், உயிராபத்தான நிலையில் உள்ள நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவைகள் மாத்திரம் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.​கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வந்த பிராந்திய ரீதியிலான பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று நண்பகல் 2.00 மணியுடன் நிறைவடைந்திருந்தது. இதனால் இன்று வழமை போல் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வருகை தந்த நோயாளிகள், நாடு தழுவிய ரீதியிலான புதிய போராட்ட அறிவிப்பால் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகினர்.​தூர இடங்களில் இருந்து அதிகாலை வேளையிலேயே வருகை தந்த நோயாளிகள், சிகிச்சை அளிக்கப்படாததைக் கண்டு கவலையுடன் வீடு திரும்பினர்.நாங்கள் தொடர்ச்சியாக வைத்தியசாலைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்புகிறோம். ஒருமுறை வந்து செல்ல போக்குவரத்துக்காக மட்டும் 2,000 முதல் 3,000 ரூபாய் வரை செலவாகிறது. நாங்கள் ஏழைகள். இந்த நாட்டில் ஏழைகளுக்கு இலவச மருத்துவ வசதி இல்லையா எமது நிலையை கருத்திற்கொண்டு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ​பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தெரிவித்தனர். இதேவேளை, தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று 48 மணிநேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையினால் வைத்திய சேவை பெற வருகைதந்த நோயாளர்கள் அவதியுற்றதை அவதானிக்க முடிந்தது.அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியது.வைத்தியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவு, மேலதிகநேர கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிபுரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement