திருகோணமலை மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலுடனும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடனும் தெய்வீக கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களினதும் விவரம் திரட்டும் நிகழ்வானது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் யதுகுலசிங்கம் அனிருத்னன் தலைமையில் இன்று (17/06/2023) திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய சோமாஸ்கந்ந மண்டபத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களின் விபரமும் தெய்வீக கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் திரட்டப்பட்டது.
மேலும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து நிர்வாக உறுப்பினர்கள், அறநெறி பாடசாலை பொறுப்பாசிரியர்கள், இந்து அமைப்பினரின் நிர்வாகத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய நிர்வாகத்தில் இடம்பெறும் குறை நிறைகளை பற்றியும் கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன், மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் இலக்குமிதேவி சிறீதரன் மற்றும் பட்டினமும் சூழலும், குச்சவெளி, தம்பலகாமம், வெருகல் இந்து சமய கலாசார உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களினதும் விவரம் திரட்டும் நிகழ்வு samugammedia திருகோணமலை மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலுடனும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடனும் தெய்வீக கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களினதும் விவரம் திரட்டும் நிகழ்வானது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் யதுகுலசிங்கம் அனிருத்னன் தலைமையில் இன்று (17/06/2023) திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய சோமாஸ்கந்ந மண்டபத்தில் இடம்பெற்றது.திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களின் விபரமும் தெய்வீக கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் திரட்டப்பட்டது. மேலும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து நிர்வாக உறுப்பினர்கள், அறநெறி பாடசாலை பொறுப்பாசிரியர்கள், இந்து அமைப்பினரின் நிர்வாகத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய நிர்வாகத்தில் இடம்பெறும் குறை நிறைகளை பற்றியும் கலந்துரையாடினர்.இந்நிகழ்வில் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன், மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் இலக்குமிதேவி சிறீதரன் மற்றும் பட்டினமும் சூழலும், குச்சவெளி, தம்பலகாமம், வெருகல் இந்து சமய கலாசார உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.