• Nov 21 2024

இலங்கையிலுள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்; யாழ்ப்பாணத்தவர் உட்பட இருவர் கைது!

Chithra / Oct 24th 2024, 7:44 am
image

இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் இருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் மற்றுமொருவர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. 

கொழும்பைச் சேர்ந்தவரின் தந்தை மாலைத்தீவு பிரஜை எனவும் தாய் இலங்கை பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் ஹெஸ்புல்லா தரப்பினருக்கு எதிராக நடத்தும் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகளை இலக்கு வைத்துச் சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அதேநேரம் அவர்களுக்கு உதவிகளை வழங்கும் தரப்பினர் தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸார் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக நம்பகமான தகவல்களுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் நேற்று தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை பல நாடுகள் புதுப்பித்துள்ளன.

மேலும், தற்போதுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத் தலங்களை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் தனது குடிமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதேவ‍ேளை, அறுகம்பை பகுதி உட்பட நாட்டின் பல பகுதிகளின் பாதுகாப்பும் நேற்றைய தினம் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கையிலுள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்; யாழ்ப்பாணத்தவர் உட்பட இருவர் கைது இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் இருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் மற்றுமொருவர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. கொழும்பைச் சேர்ந்தவரின் தந்தை மாலைத்தீவு பிரஜை எனவும் தாய் இலங்கை பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் ஹெஸ்புல்லா தரப்பினருக்கு எதிராக நடத்தும் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகளை இலக்கு வைத்துச் சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் அவர்களுக்கு உதவிகளை வழங்கும் தரப்பினர் தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸார் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக நம்பகமான தகவல்களுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் நேற்று தெரிவித்துள்ளது.இந்த எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை பல நாடுகள் புதுப்பித்துள்ளன.மேலும், தற்போதுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத் தலங்களை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் தனது குடிமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.இதேவ‍ேளை, அறுகம்பை பகுதி உட்பட நாட்டின் பல பகுதிகளின் பாதுகாப்பும் நேற்றைய தினம் பலப்படுத்தப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement