• Apr 11 2025

கொழும்பு - கண்டி பிரதான வீதிக்கு பூட்டு!

Tamil nila / Jun 8th 2024, 9:09 pm
image

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி இன்று இரவு 7.30 மணி முதல் நாளை அதிகாலை 01 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதன்படி, சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் வரகாபொல, அம்பேபுஸ்ஸ சந்தியில் இடப்புறம் திரும்பி குருநாகல் வீதி ஊடாக கண்டியை அடையலாம்.

இது தவிர கேகாலை கரடுபான ஊடாக ரம்புக்கனை மற்றும் மாவனெல்ல நகரிலிருந்து  ரம்புக்கனை நகரை அடைந்து ஹதரலியத்த வீதியில் கலகெதர ஊடாக கண்டியை அடைய முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மாவனெல்ல நகரத்திலிருந்து ஹெம்மாதகம ஊடாக கம்பளை வீதி ஊடாக கண்டியை அடையும் வாய்ப்பும் உள்ளது.

கொழும்பு - கண்டி பிரதான வீதிக்கு பூட்டு கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி இன்று இரவு 7.30 மணி முதல் நாளை அதிகாலை 01 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.அதன்படி, சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் வரகாபொல, அம்பேபுஸ்ஸ சந்தியில் இடப்புறம் திரும்பி குருநாகல் வீதி ஊடாக கண்டியை அடையலாம்.இது தவிர கேகாலை கரடுபான ஊடாக ரம்புக்கனை மற்றும் மாவனெல்ல நகரிலிருந்து  ரம்புக்கனை நகரை அடைந்து ஹதரலியத்த வீதியில் கலகெதர ஊடாக கண்டியை அடைய முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அத்துடன் மாவனெல்ல நகரத்திலிருந்து ஹெம்மாதகம ஊடாக கம்பளை வீதி ஊடாக கண்டியை அடையும் வாய்ப்பும் உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement