• Apr 03 2025

கொழும்பில் மாடியிலிருந்து வீழ்ந்த மாணவர்கள் மரணத்தில் சந்தேகம் - சட்டத்தரணி மூலம் தந்தை அறிவிப்பு

Chithra / Jul 9th 2024, 12:28 pm
image

 

கொம்பனித்தெரு, அல்டேர் தொடர்மாடி குடியிருப்பின் 67ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவர்களின் மரணம் சந்தேகத்திற்குரியதென உயிரிழந்த மாணவனின் தந்தை சட்டத்தரணி மூலமாக நேற்று (08) கோட்டை நீதவானுக்கு அறிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் போது தனிப்பட்ட முறைப்பாடு செய்வதற்கு அனுமதி மறுத்துள்ள நீதவான் தேவையேற்பட்டால் அது தொடர்பில் கொம்பெனித்தெரு பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் தனது கட்சிக்காரரின் மகன் உயிரிழந்ததாலேயே அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

எனவே, சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட முறைப்பாடு செய்வதற்கு தமது கட்சிக்காரருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு சட்டத்தரணி அசங்க தயாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கொம்பெனித் தெரு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மாடியிலிருந்து வீழ்ந்த மாணவர்கள் மரணத்தில் சந்தேகம் - சட்டத்தரணி மூலம் தந்தை அறிவிப்பு  கொம்பனித்தெரு, அல்டேர் தொடர்மாடி குடியிருப்பின் 67ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவர்களின் மரணம் சந்தேகத்திற்குரியதென உயிரிழந்த மாணவனின் தந்தை சட்டத்தரணி மூலமாக நேற்று (08) கோட்டை நீதவானுக்கு அறிவித்துள்ளார்.பிரேத பரிசோதனையின் போது தனிப்பட்ட முறைப்பாடு செய்வதற்கு அனுமதி மறுத்துள்ள நீதவான் தேவையேற்பட்டால் அது தொடர்பில் கொம்பெனித்தெரு பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளார்.இச்சம்பவத்தில் தனது கட்சிக்காரரின் மகன் உயிரிழந்ததாலேயே அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட முறைப்பாடு செய்வதற்கு தமது கட்சிக்காரருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு சட்டத்தரணி அசங்க தயாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் கொம்பெனித் தெரு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now