• Sep 17 2024

வந்தாறுமூலை வளாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டட 158 பேரின் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

Chithra / Sep 5th 2024, 2:59 pm
image

Advertisement

1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆந் திகதி கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்தவேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 34வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நீதிகோரிய போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றிலில் கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பல்கலைக்கழக வளாகத்தின் முன் பாதாதைகளை ஏந்தியவாறு தமது உறவுகளுக்கு நீதி கோரி கவன ஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டதுடன், உறவுகள் மற்றும் மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மௌன இறைவணக்கம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.


வந்தாறுமூலை வளாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டட 158 பேரின் நினைவேந்தல் அனுஸ்டிப்பு 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆந் திகதி கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்தவேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 34வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நீதிகோரிய போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றிலில் கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது பல்கலைக்கழக வளாகத்தின் முன் பாதாதைகளை ஏந்தியவாறு தமது உறவுகளுக்கு நீதி கோரி கவன ஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டதுடன், உறவுகள் மற்றும் மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மௌன இறைவணக்கம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement