• Sep 24 2024

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்..! உயிரிழந்த மாணவிகளுக்கு யாழில் அஞ்சலி..!samugammedia

Sharmi / Aug 14th 2023, 2:15 pm
image

Advertisement

செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவுதினம் வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் இன்று நினைவுகூறப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தலானது, இன்று காலை 11.15 மணியளவில்இ தமிழரசுகட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்பொழுது உயிர்நீத்த உறுவுகளிற்கு ஈகைசுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் 2006.08.14 அன்று  கிபிர் விமானம் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 54 பேரும்  பணியாளர்கள் 7 பேரும் உள்ளடங்கலாக 61பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





செஞ்சோலை படுகொலை நினைவேந்தல். உயிரிழந்த மாணவிகளுக்கு யாழில் அஞ்சலி.samugammedia செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவுதினம் வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் இன்று நினைவுகூறப்பட்டு வருகின்றது.அந்தவகையில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தலானது, இன்று காலை 11.15 மணியளவில்இ தமிழரசுகட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.இதன்பொழுது உயிர்நீத்த உறுவுகளிற்கு ஈகைசுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் 2006.08.14 அன்று  கிபிர் விமானம் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 54 பேரும்  பணியாளர்கள் 7 பேரும் உள்ளடங்கலாக 61பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement