• Sep 19 2024

நாடளாவிய ரீதியில் இன்று நடைபெறவுள்ள மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள்..! பலத்த பாதுகாப்பில் கொழும்பு

Chithra / Sep 18th 2024, 10:23 am
image

Advertisement

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க,  நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை  இறுதி நாளான இன்றைய தினம் நடத்தவுள்ளனர்.

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்  கொழும்பு கிராண்ட்பாஸ், மாத்தறை, காலி, களுத்துறை, ஹோமாகம மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளன. இறுதிப் பிரச்சாரக் கூட்டம்  மருதானையில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் காலி, பேருவளை மற்றும் மத்திய கொழும்பு ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளன. அவரது இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் டவர் ஹொலுக்கு முன்பாக நடைபெறவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்  களுத்துறை, கம்பஹா மற்றும் நுகேகொட ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளன. அவரது இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நுகேகொடையில் நடைபெறவுள்ளது. 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் திஸ்ஸமஹாராம மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது. அவரது இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிலியந்தலையில் நடைபெறவுள்ளது.

சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம்  கொட்டாவ பிரதான பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ளது.

மக்கள் போராட்டம் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரிபத்கொடை பகுதியில் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் இன்று நடைபெறவுள்ள மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள். பலத்த பாதுகாப்பில் கொழும்பு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க,  நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை  இறுதி நாளான இன்றைய தினம் நடத்தவுள்ளனர்.சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்  கொழும்பு கிராண்ட்பாஸ், மாத்தறை, காலி, களுத்துறை, ஹோமாகம மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளன. இறுதிப் பிரச்சாரக் கூட்டம்  மருதானையில் நடைபெறவுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் காலி, பேருவளை மற்றும் மத்திய கொழும்பு ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளன. அவரது இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் டவர் ஹொலுக்கு முன்பாக நடைபெறவுள்ளது.தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்  களுத்துறை, கம்பஹா மற்றும் நுகேகொட ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளன. அவரது இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நுகேகொடையில் நடைபெறவுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் திஸ்ஸமஹாராம மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது. அவரது இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிலியந்தலையில் நடைபெறவுள்ளது.சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம்  கொட்டாவ பிரதான பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ளது.மக்கள் போராட்டம் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரிபத்கொடை பகுதியில் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement