• Sep 20 2024

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தோட்ட தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு!!

crownson / Dec 16th 2022, 7:45 am
image

Advertisement

கடந்த 8ம் திகதி தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட தீர்வுகளின் பிரகாரம், சாமிமலை கவரவில தோட்டத்தில் மின்சார தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கடந்த 5ம் திகதி உயிரிழந்த அமரர் N.சிவகுமாரின் குடும்பத்தாருக்கான நஷ்டஈட்டினை வெகுவிரைவில் பெற்றுத்தரும் நோக்கில் கவரவில தோட்ட முகாமையாளருடன்  கலந்துரையாடல் ஒன்றை  தொழிலாளர் தேசிய சங்கம் மேற்கொண்டது. 

இதற்கமைய அன்னாரின் மனைவி  மற்றும் குழந்தைகள் மூவரினதும்  பிறப்புச் சான்றிதழ்கள், வங்கிக்கணக்கு புத்தகபிரதிகள் உள்ளிட்ட ஆவணங்களை  தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்ததுடன் அவர்கள் அத் தொகையினை குடும்ப உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் வெகு விரைவில்  செலுத்துவதாக  உறுதியளித்தனர்.

 இதன்போது குறித்த ஆவணங்களை பொறுப்பேற்றதற்கான 

உறுதிக்கடிதம் ஒன்றினையும் தோட்டநிர்வாகத்திடமிருந்து திருமதி.சிவகுமாருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. 

அத்துடன் தோட்ட நிர்வாகம் ஒத்துக்கொண்டதற்கிணங்க இன்று முதல் அவர் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணியில் இணைந்து கொள்ளவுள்ளார்.

 இக்கலந்துரையாடல் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் க.நகுலேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாவட்ட இயக்குனர் ஜெயபால், பிரதேசஅமைப்பாளர் சோமதேவன் மற்றும் அமைப்பாளர்கள் தோட்ட கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கவரவில அப்பர் குரூடன் தோட்டத்தில் பச்சை தேயிலை கொழுந்து நிறுவையில் வழமைக்கு மாறாக அதிகப்படியான இறாத்தல் கொழுந்து தனிநபரின் நிறுவையில் குறைக்கப்படுவதை கண்டித்ததன் விளைவால் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலைக்கும் முகாமையாளருடன் கலந்துரையாடி சுமூகமான தீர்வினை பெற்றுக் கொடுத்ததற்கிணங்க இன்று  முதல் வழமைபோல் அவர்கள் பணிக்கு செல்வதாகவும் உறுதியளித்தனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தோட்ட தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு கடந்த 8ம் திகதி தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட தீர்வுகளின் பிரகாரம், சாமிமலை கவரவில தோட்டத்தில் மின்சார தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கடந்த 5ம் திகதி உயிரிழந்த அமரர் N.சிவகுமாரின் குடும்பத்தாருக்கான நஷ்டஈட்டினை வெகுவிரைவில் பெற்றுத்தரும் நோக்கில் கவரவில தோட்ட முகாமையாளருடன்  கலந்துரையாடல் ஒன்றை  தொழிலாளர் தேசிய சங்கம் மேற்கொண்டது. இதற்கமைய அன்னாரின் மனைவி  மற்றும் குழந்தைகள் மூவரினதும்  பிறப்புச் சான்றிதழ்கள், வங்கிக்கணக்கு புத்தகபிரதிகள் உள்ளிட்ட ஆவணங்களை  தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்ததுடன் அவர்கள் அத் தொகையினை குடும்ப உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் வெகு விரைவில்  செலுத்துவதாக  உறுதியளித்தனர். இதன்போது குறித்த ஆவணங்களை பொறுப்பேற்றதற்கான உறுதிக்கடிதம் ஒன்றினையும் தோட்டநிர்வாகத்திடமிருந்து திருமதி.சிவகுமாருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. அத்துடன் தோட்ட நிர்வாகம் ஒத்துக்கொண்டதற்கிணங்க இன்று முதல் அவர் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணியில் இணைந்து கொள்ளவுள்ளார். இக்கலந்துரையாடல் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் க.நகுலேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாவட்ட இயக்குனர் ஜெயபால், பிரதேசஅமைப்பாளர் சோமதேவன் மற்றும் அமைப்பாளர்கள் தோட்ட கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.மேலும் கவரவில அப்பர் குரூடன் தோட்டத்தில் பச்சை தேயிலை கொழுந்து நிறுவையில் வழமைக்கு மாறாக அதிகப்படியான இறாத்தல் கொழுந்து தனிநபரின் நிறுவையில் குறைக்கப்படுவதை கண்டித்ததன் விளைவால் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலைக்கும் முகாமையாளருடன் கலந்துரையாடி சுமூகமான தீர்வினை பெற்றுக் கொடுத்ததற்கிணங்க இன்று  முதல் வழமைபோல் அவர்கள் பணிக்கு செல்வதாகவும் உறுதியளித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement