தித்வா புயலினால் பாதிக்கப்பட்டு பகுதியளவில் வீடுகளை இழந்தவர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (12) மாலை கிண்ணியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடை நடைபெற்றது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலை வழங்கிவைத்தார்.
இரண்டாம் கட்டமாக பகுதியளவில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த சுமார் 17 பேர்களுக்கு 10.7 மில்லியன் ரூபாய் பெறுமதியாள காசோலைகள் இவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதுவரை, கிண்ணியா பிரதேசத்தில் தித்வா புயலினால், முழுமையாகவும் பகுதியளவிலும் வாழ்விடங்களை இழந்தவர்களுக்கு சுமார் 46 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருப்பதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளர் எம். ஈ. எம். ராபிக், பிரதேச கிளீன் ஸ்ரீலங்கா இணைப்பாளர் அஷ்ரப் இம்ரான் மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிண்ணியாவில் திக்வா புயலினால் வீடுகளை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு தித்வா புயலினால் பாதிக்கப்பட்டு பகுதியளவில் வீடுகளை இழந்தவர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (12) மாலை கிண்ணியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடை நடைபெற்றது.கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலை வழங்கிவைத்தார்.இரண்டாம் கட்டமாக பகுதியளவில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த சுமார் 17 பேர்களுக்கு 10.7 மில்லியன் ரூபாய் பெறுமதியாள காசோலைகள் இவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.இதுவரை, கிண்ணியா பிரதேசத்தில் தித்வா புயலினால், முழுமையாகவும் பகுதியளவிலும் வாழ்விடங்களை இழந்தவர்களுக்கு சுமார் 46 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருப்பதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.இந்த நிகழ்வில், பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளர் எம். ஈ. எம். ராபிக், பிரதேச கிளீன் ஸ்ரீலங்கா இணைப்பாளர் அஷ்ரப் இம்ரான் மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.