கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் விசேட நட்டஈடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, கடமையின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபா விசேட நட்டஈடாக வழங்கப்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நட்டஈடு மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவது தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிக்க கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, குறித்த குழு சமர்ப்பித்த அறிக்கையை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்த நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக சுற்றறிக்கையின் கீழ் வழங்கப்படும் வழமையான நட்டஈட்டிற்கு மேலதிகமாக, விசேட கொடுப்பனவுகளையும் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதன்படி, கடமையின் போது உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாவும், முழுமையாக அங்கவீனமுற்ற அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், சம்பாத்தியத் திறனை 100 வீதம் இழக்கும் வகையில் பகுதியளவில் அங்கவீனமுற்ற அதிகாரிகளுக்கு தலா 40 இலட்சம் ரூபாவும், தற்காலிக பகுதியளவு இயலாமைக்கு உள்ளாகியுள்ள அதிகாரிகளுக்கு தலா 30 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை, சிறைச்சாலை தந்திரோபாயப் படையின் (Prison Tactical Force) செயற்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, குறித்த படைக்குச் சட்டபூர்வ அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், படையை வலுப்படுத்துவதற்குத் தகுதியான நபர்களைப் போதுமான அளவில் ஆட்சேர்ப்பு செய்வதற்கும், அவர்களுக்குத் தொடர்புடைய துறைகளில் விசேட பயிற்சிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறைச்சாலை தந்திரோபாயப் படைக்குத் தேவையான நவீன உபகரணங்களை வழங்குவதுடன், அப்படைக்கென தனியான தலைமையகம் ஒன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறைச்சாலை மோதல்களில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.50 இலட்சம் நட்டஈடு கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் விசேட நட்டஈடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி, கடமையின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபா விசேட நட்டஈடாக வழங்கப்படவுள்ளது.பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நட்டஈடு மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவது தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிக்க கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து, குறித்த குழு சமர்ப்பித்த அறிக்கையை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்த நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பொது நிர்வாக சுற்றறிக்கையின் கீழ் வழங்கப்படும் வழமையான நட்டஈட்டிற்கு மேலதிகமாக, விசேட கொடுப்பனவுகளையும் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.அதன்படி, கடமையின் போது உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாவும், முழுமையாக அங்கவீனமுற்ற அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.அத்துடன், சம்பாத்தியத் திறனை 100 வீதம் இழக்கும் வகையில் பகுதியளவில் அங்கவீனமுற்ற அதிகாரிகளுக்கு தலா 40 இலட்சம் ரூபாவும், தற்காலிக பகுதியளவு இயலாமைக்கு உள்ளாகியுள்ள அதிகாரிகளுக்கு தலா 30 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.இதேவேளை, சிறைச்சாலை தந்திரோபாயப் படையின் (Prison Tactical Force) செயற்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, குறித்த படைக்குச் சட்டபூர்வ அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.மேலும், படையை வலுப்படுத்துவதற்குத் தகுதியான நபர்களைப் போதுமான அளவில் ஆட்சேர்ப்பு செய்வதற்கும், அவர்களுக்குத் தொடர்புடைய துறைகளில் விசேட பயிற்சிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சிறைச்சாலை தந்திரோபாயப் படைக்குத் தேவையான நவீன உபகரணங்களை வழங்குவதுடன், அப்படைக்கென தனியான தலைமையகம் ஒன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.