• May 04 2024

சாந்தனின் மறைவிற்கு இரங்கல் ...! யாழ் பல்கலையில் பறக்கும் கருப்புக் கொடிகள்...!

Sharmi / Mar 2nd 2024, 1:30 pm
image

Advertisement

சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ் பல்கலைக் கழக வளாகமெங்கும்  இன்றையதினம்(02) கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த 28 ஆம்  திகதி (28) காலை காலமானார். 

இந்நிலையில் அவரது பூதவுடல் நேற்றையதினம்(01)  விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவரது பூதவுடலுக்கு  இலங்கையில் மீள் உடற் கூற்றுப் பரிசோதனை செய்யப் பணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சாந்தனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கலை  தெரிவித்துவரும் நிலையில் யாழ் பல்கலையிலும் சாந்தனின் மறைவுக்கு  இரங்கல் தெரிவிக்கும் வகையில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாந்தனின் மறைவிற்கு இரங்கல் . யாழ் பல்கலையில் பறக்கும் கருப்புக் கொடிகள். சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ் பல்கலைக் கழக வளாகமெங்கும்  இன்றையதினம்(02) கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த 28 ஆம்  திகதி (28) காலை காலமானார். இந்நிலையில் அவரது பூதவுடல் நேற்றையதினம்(01)  விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவரது பூதவுடலுக்கு  இலங்கையில் மீள் உடற் கூற்றுப் பரிசோதனை செய்யப் பணிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சாந்தனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கலை  தெரிவித்துவரும் நிலையில் யாழ் பல்கலையிலும் சாந்தனின் மறைவுக்கு  இரங்கல் தெரிவிக்கும் வகையில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement