ஹட்டன் அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் கினிகத்தேனை கடவளை தமிழ் பாடசாலை மாணவர்களைப் பேருந்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் இருந்து பாடசாலை மாணவர்களை வெளியேறுமாறு நடத்துநர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அரச பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை கடவளை விக்னேஸ்வரா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு என இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச்சீட்டினை பேருந்து நடத்துநரிடம் காண்பிக்கும் போது பருவச்சீட்டினை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து வெளியேறுமாறு நடத்துநர் தெரிவிப்பதாக மாணவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நாவலபிட்டியில் இருந்து கினிகதேனை ஊடாக ஹட்டன் வரை செல்லும் அரச பேருந்தில் அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
“இது அரச பேருந்து நடத்துநரின் சொந்த பேருந்து அல்ல, பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் பணம் கொடுத்து பருவச்சீட்டினை பெற்றுள்ளோம் எமக்கு பேருந்தைவிட்டு வெளியேற முடியாது“ என மாணவர்கள் கேள்வி ஏழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த பேருந்து நடத்துநர், “ஆம் இது என்னுடைய பேருந்து நீங்கள் எல்லாம் பேருந்தைவிட்டு இறங்குங்கள்” என வலியுறுத்தியதாக வெளியிடப்பட்ட காணொளி ஊடாக தெரியவந்துள்ளது.
தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ந்தும் இது போன்ற அநீதிகள் இடம்பெற்று வருவதுடன், இது தொடர்பில் அரச அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் ஏறிய பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் இருந்து வெளியேறுமாறு கடுந்தொனியில் பேசி நடந்து கொண்ட பஸ்ஸின் நடத்துனருக்கு எதிராக அதிரடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம், ஹட்டன் டிப்போ முகாமையாளரை வலியுறுத்தியுள்ளார்.
அரச பேருந்தில் நடத்துநர் அடாவடி; பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழ் மாணவர்கள் ஹட்டன் அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் கினிகத்தேனை கடவளை தமிழ் பாடசாலை மாணவர்களைப் பேருந்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் இருந்து பாடசாலை மாணவர்களை வெளியேறுமாறு நடத்துநர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அரச பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை கடவளை விக்னேஸ்வரா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.பாடசாலை மாணவர்களுக்கு என இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச்சீட்டினை பேருந்து நடத்துநரிடம் காண்பிக்கும் போது பருவச்சீட்டினை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து வெளியேறுமாறு நடத்துநர் தெரிவிப்பதாக மாணவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.நாவலபிட்டியில் இருந்து கினிகதேனை ஊடாக ஹட்டன் வரை செல்லும் அரச பேருந்தில் அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. “இது அரச பேருந்து நடத்துநரின் சொந்த பேருந்து அல்ல, பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் பணம் கொடுத்து பருவச்சீட்டினை பெற்றுள்ளோம் எமக்கு பேருந்தைவிட்டு வெளியேற முடியாது“ என மாணவர்கள் கேள்வி ஏழுப்பியுள்ளனர்.அதற்கு பதிலளித்த பேருந்து நடத்துநர், “ஆம் இது என்னுடைய பேருந்து நீங்கள் எல்லாம் பேருந்தைவிட்டு இறங்குங்கள்” என வலியுறுத்தியதாக வெளியிடப்பட்ட காணொளி ஊடாக தெரியவந்துள்ளது.தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ந்தும் இது போன்ற அநீதிகள் இடம்பெற்று வருவதுடன், இது தொடர்பில் அரச அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றது.இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் ஏறிய பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் இருந்து வெளியேறுமாறு கடுந்தொனியில் பேசி நடந்து கொண்ட பஸ்ஸின் நடத்துனருக்கு எதிராக அதிரடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம், ஹட்டன் டிப்போ முகாமையாளரை வலியுறுத்தியுள்ளார்.