• Mar 09 2025

உள்ளூராட்சித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய சன்முகராஜா ஜீவராசா

Chithra / Mar 7th 2025, 12:15 pm
image

 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கான உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சன்முகராஜா ஜீவராசா செலுத்தியுள்ளார். 

கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் இன்று காலை  அவர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவாகிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சன்முகராஜா ஜீவராசா, கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டமைக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனால் உள்ளூராட்சித் தேர்தலிலும் சுயேட்சையாக களமிறங்க இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பச்சிலைப்பள்ளி ஆகிய இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கரைச்சி பிரதேச சபைக்கு மாத்திரம் அவர் தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். 

உள்ளூராட்சித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய சன்முகராஜா ஜீவராசா  கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கான உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சன்முகராஜா ஜீவராசா செலுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் இன்று காலை  அவர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவாகிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சன்முகராஜா ஜீவராசா, கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டமைக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.இதனால் உள்ளூராட்சித் தேர்தலிலும் சுயேட்சையாக களமிறங்க இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பச்சிலைப்பள்ளி ஆகிய இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கரைச்சி பிரதேச சபைக்கு மாத்திரம் அவர் தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement