திருகோணமலை- ரொட்டவெவ மற்றும் மிரிஸ்வெவ கிராமத்தில் தங்களது வீடுகளுக்கு பின்னால் யானை மின் வேலி அமைத்து வருவதாக தெரிவித்து மக்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இன்று காலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வேலி அமைத்துக் கொண்டிருந்தபோது வீட்டுக்கு பின்னால் யானை மின் வேலி அமைக்க வேண்டாம் என தெரிவித்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்தனர்.
இதனையடுத்து குறித்த பகுதியிலிருந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
தங்களது வீட்டுக்கு பின்னால் அமைக்கப்பட்டுள்ள மலசல கூடத்திற்கு அருகில் யானை மின் வேலி அமைப்பதினால் தங்களது பிள்ளைகளை தனிமையாக அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், யானை மின் வேலி அமைப்பதனால் கிராமத்தைச் சுற்றி யானை மின் வேலி அமைக்குமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடுகளுக்குப் பின் மின் வேலி அமைப்பு; வனத்திணைக்களத்தினருடன் மக்கள் கடும் முறுகல் திருகோணமலை- ரொட்டவெவ மற்றும் மிரிஸ்வெவ கிராமத்தில் தங்களது வீடுகளுக்கு பின்னால் யானை மின் வேலி அமைத்து வருவதாக தெரிவித்து மக்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் இன்று காலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வேலி அமைத்துக் கொண்டிருந்தபோது வீட்டுக்கு பின்னால் யானை மின் வேலி அமைக்க வேண்டாம் என தெரிவித்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்தனர்.இதனையடுத்து குறித்த பகுதியிலிருந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. தங்களது வீட்டுக்கு பின்னால் அமைக்கப்பட்டுள்ள மலசல கூடத்திற்கு அருகில் யானை மின் வேலி அமைப்பதினால் தங்களது பிள்ளைகளை தனிமையாக அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், யானை மின் வேலி அமைப்பதனால் கிராமத்தைச் சுற்றி யானை மின் வேலி அமைக்குமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.