கொழும்பு, மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று (6) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாளிகாவத்தை போதிராஜ மாவத்தையைச் சேர்ந்த 21 வயதுடையவர் ஆவார். அத்துடன் குறித்த சந்தேகநபர் கெசல்வத்த கவி என்ற திட்டமிட்ட குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்றும் தெரிய வந்துள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. முறைப்பாட்டுக்கமைய முகத்துவாரம் பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரை சுற்றிவளைத்துள்ளனர்.
எனினும் சந்தேகநபர் தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டு விட்டு கிம்புல எல பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளார். அதன்பின்னர் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்ட வேளையில் அங்கு பதுங்கியிருந்த சந்தேகநபர் முச்சக்கரவண்டி ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், அங்கு வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த மாதம்பிட்டிய பொலிஸாரின் உதவியுடன் அந்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், கைதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துப்பாக்கித்தாரியை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெசல்வத்த கவியின் அறிவுறுத்தலின் படி, வாழைத்தோட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஏற்றியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் பின்னர், புறக்கோட்டை பகுதியில் அவர் இறங்கியதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அத்துடன் துப்பாக்கித்தாரி தொடர்பில் தாம் வேறு எந்த தகவலையும் அறிந்திருக்கவில்லை எனவும் கைதான சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஞ்சிக்காவத்தை துப்பாக்கிச் சூடு; தப்பியோடிய சந்தேகநபரை வலைவீசி பிடித்த பொலிஸார் கொழும்பு, மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று (6) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாளிகாவத்தை போதிராஜ மாவத்தையைச் சேர்ந்த 21 வயதுடையவர் ஆவார். அத்துடன் குறித்த சந்தேகநபர் கெசல்வத்த கவி என்ற திட்டமிட்ட குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்றும் தெரிய வந்துள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. முறைப்பாட்டுக்கமைய முகத்துவாரம் பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரை சுற்றிவளைத்துள்ளனர். எனினும் சந்தேகநபர் தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டு விட்டு கிம்புல எல பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளார். அதன்பின்னர் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்ட வேளையில் அங்கு பதுங்கியிருந்த சந்தேகநபர் முச்சக்கரவண்டி ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், அங்கு வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த மாதம்பிட்டிய பொலிஸாரின் உதவியுடன் அந்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர். இந்தநிலையில், கைதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துப்பாக்கித்தாரியை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெசல்வத்த கவியின் அறிவுறுத்தலின் படி, வாழைத்தோட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஏற்றியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் பின்னர், புறக்கோட்டை பகுதியில் அவர் இறங்கியதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அத்துடன் துப்பாக்கித்தாரி தொடர்பில் தாம் வேறு எந்த தகவலையும் அறிந்திருக்கவில்லை எனவும் கைதான சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.