துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவிற்கும் ஹரக் கட்டாவிற்கும் தொடர்புள்ளது என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர சபைக்குள் தனது கடமைகளை முன்னெடுத்து வரும் வேளையில், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு தொடர்பான பொலிஸ்பிரிவின் கூற்றுப்படி, உள்ளூர் சபைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரி, சபைக்குள் இருந்தபோது வெலிகம பிரதேச சபைத் தலைவரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர்கள் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் காட்சி அருகிலிருந்த சிசிரிவி காணொளியில் பதிவாகி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' என்ற நதுன் சிந்தகவின் நெருங்கிய கூட்டாளியாக குறித்த துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலையை அடுத்து வெளியாகி வரும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் ஹரக் கட்டாவுடன் தொடர்பு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவிற்கும் ஹரக் கட்டாவிற்கும் தொடர்புள்ளது என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர சபைக்குள் தனது கடமைகளை முன்னெடுத்து வரும் வேளையில், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூடு தொடர்பான பொலிஸ்பிரிவின் கூற்றுப்படி, உள்ளூர் சபைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரி, சபைக்குள் இருந்தபோது வெலிகம பிரதேச சபைத் தலைவரை சுட்டுக் கொலை செய்துள்ளார். இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர்கள் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் காட்சி அருகிலிருந்த சிசிரிவி காணொளியில் பதிவாகி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' என்ற நதுன் சிந்தகவின் நெருங்கிய கூட்டாளியாக குறித்த துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலையை அடுத்து வெளியாகி வரும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.