சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடன் கொண்டுவருமாறு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்குத் தான் யோசனை தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனும், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களுடனும் தான் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சபாநாயகர் சுயாதீனமாகச் செயற்படத் தவறியுள்ளதோடு, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பேசுவதற்கு இடமளிக்காமல் ஜனநாயக விரோத முறையில் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இதற்கு முன்னரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் (IPU), பொதுநலவாய நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற ஒன்றியங்களுக்கு முறைப்பாடு அளித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
சபாநாயகர் தனது கடமைகளைச் சரியாகச் செய்வார் என்ற நம்பிக்கையில் அப்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணியை எவ்வித விசாரணையுமின்றித் தன்னிச்சையாக இடைநிறுத்தியுள்ளமையானது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான பாரிய தாக்குதலாகும் எனவும், இதனால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாகக் கொண்டு வருவது அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கம் கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காது நாட்டின் கணக்காய்வு மற்றும் சட்டமா அதிபரின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதன் மூலம் சட்டத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தி வருவதாகவும், இப்போது நாடாளுமன்றத்தின் மீதும் இத்தகைய அழுத்தங்களைச் செலுத்தத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது மிகவும் பாரதூரமான நிலைமை எனக் குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகச் செயற்படும் அனைவரும் இதற்கு எதிராக முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர மீண்டும் யோசனை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடன் கொண்டுவருமாறு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்குத் தான் யோசனை தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.இது குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனும், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களுடனும் தான் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.சபாநாயகர் சுயாதீனமாகச் செயற்படத் தவறியுள்ளதோடு, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பேசுவதற்கு இடமளிக்காமல் ஜனநாயக விரோத முறையில் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.இதற்கு முன்னரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் (IPU), பொதுநலவாய நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற ஒன்றியங்களுக்கு முறைப்பாடு அளித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.சபாநாயகர் தனது கடமைகளைச் சரியாகச் செய்வார் என்ற நம்பிக்கையில் அப்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணியை எவ்வித விசாரணையுமின்றித் தன்னிச்சையாக இடைநிறுத்தியுள்ளமையானது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான பாரிய தாக்குதலாகும் எனவும், இதனால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாகக் கொண்டு வருவது அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார்.தற்போதைய அரசாங்கம் கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காது நாட்டின் கணக்காய்வு மற்றும் சட்டமா அதிபரின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதன் மூலம் சட்டத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தி வருவதாகவும், இப்போது நாடாளுமன்றத்தின் மீதும் இத்தகைய அழுத்தங்களைச் செலுத்தத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இது மிகவும் பாரதூரமான நிலைமை எனக் குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகச் செயற்படும் அனைவரும் இதற்கு எதிராக முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.