• Jan 13 2025

அநுரவின் திட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்திக்குள் சதி! துமிந்த சந்தேகம்

Chithra / Jan 5th 2025, 3:16 pm
image

 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் திட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்திக்குள் சதித்திட்டம்  மேற்கொள்ளப்படலாம் என்ற சந்தேகம் தனக்கு இரப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுகாதாரத்துறைக்கு தனியாரின் ஒத்துழைப்பு தேவையில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடா, தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடா அல்லது நளிந்த ஜயதிஸ்ஸவின் தனிப்பட்ட  நிலைப்பாடா என்பது தெரியாது. ஆனால் அவரால் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த கருத்து மிகப் பாரதூரமானதாகும்.

க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தன்று மாத்திரம் தரையில் இறங்கி வேலை செய்வதற்கும், இந்த வெலைத்திடம் நிறைவு பெறும் வரை தரையிலேயே வேலை செய்வதற்கும் இடையில் வேறுபாடு உண்டு. எனவே நாம் இது தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இந்த திட்டம் நிறைவடையும் வரை எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களால் இந்த அளவுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டால் அது மகிழ்ச்சிக்குரியதாகும்.

க்ளீன் ஸ்ரீ லங்கா என்ற தொனிப்பொருள் சிறந்ததாகும் ஆனால் இதன் உள்நோக்கம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. 

இந்த வேலைத்திட்டத்தை முதலில் தேசிய மக்கள் சக்திக்குள் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். காரணம் தேசிய மக்கள் சக்தியின் எம்.பியான முன்னாள் சபாநாயகர் போலியான கலாநிதி பட்டத்தை முன்வைத்து இறுதியில் பதவி துறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

எனவே க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் எச்சரிக்கையாக அன்றி முன்னுதாரணமானதாக இருக்க வேண்டும். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முற்போக்கு சிந்தனையுடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்திற்கு சகல துறையினரதும் ஒத்துழைப்புக்களை ஜனாதிபதி எதிர்ப்பார்க்கின்றார். ஆனால் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தனியார் துறையை தூக்கி எறிந்து பேசுகின்றார். 

விவசாய அமைச்சர் தேசியக் கொடியை தலைகீழாக பறக்க விடுகின்றார். இவ்வாறான செயற்பாடுகள் ஜனாதிபதியின் முயற்சிகளை கேலிக்குள்ளாக்குவதைப் போன்றிருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார். 

அநுரவின் திட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்திக்குள் சதி துமிந்த சந்தேகம்  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் திட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்திக்குள் சதித்திட்டம்  மேற்கொள்ளப்படலாம் என்ற சந்தேகம் தனக்கு இரப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.சுகாதாரத்துறைக்கு தனியாரின் ஒத்துழைப்பு தேவையில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடா, தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடா அல்லது நளிந்த ஜயதிஸ்ஸவின் தனிப்பட்ட  நிலைப்பாடா என்பது தெரியாது. ஆனால் அவரால் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த கருத்து மிகப் பாரதூரமானதாகும்.க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தன்று மாத்திரம் தரையில் இறங்கி வேலை செய்வதற்கும், இந்த வெலைத்திடம் நிறைவு பெறும் வரை தரையிலேயே வேலை செய்வதற்கும் இடையில் வேறுபாடு உண்டு. எனவே நாம் இது தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.இந்த திட்டம் நிறைவடையும் வரை எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களால் இந்த அளவுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டால் அது மகிழ்ச்சிக்குரியதாகும்.க்ளீன் ஸ்ரீ லங்கா என்ற தொனிப்பொருள் சிறந்ததாகும் ஆனால் இதன் உள்நோக்கம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. இந்த வேலைத்திட்டத்தை முதலில் தேசிய மக்கள் சக்திக்குள் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். காரணம் தேசிய மக்கள் சக்தியின் எம்.பியான முன்னாள் சபாநாயகர் போலியான கலாநிதி பட்டத்தை முன்வைத்து இறுதியில் பதவி துறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.எனவே க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் எச்சரிக்கையாக அன்றி முன்னுதாரணமானதாக இருக்க வேண்டும். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முற்போக்கு சிந்தனையுடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.இந்த வேலைத்திட்டத்திற்கு சகல துறையினரதும் ஒத்துழைப்புக்களை ஜனாதிபதி எதிர்ப்பார்க்கின்றார். ஆனால் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தனியார் துறையை தூக்கி எறிந்து பேசுகின்றார். விவசாய அமைச்சர் தேசியக் கொடியை தலைகீழாக பறக்க விடுகின்றார். இவ்வாறான செயற்பாடுகள் ஜனாதிபதியின் முயற்சிகளை கேலிக்குள்ளாக்குவதைப் போன்றிருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement