• Dec 17 2025

மீனவர்களின் பாதிப்பு தொடர்பிலான கலந்தாய்வு!

shanuja / Dec 15th 2025, 10:36 pm
image

கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலைகளின் காரணமாக மீனவ சமூகம் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (15) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடல், பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள், மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


பேரிடர் காரணமாக அழிக்கப்பட்ட படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்துதல், கோட்பே மீன்வளத் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க பாதுகாப்பை அதிகரித்தல், தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துதல், கோட்பே மீன்வளத் துறைமுகத்தை விரிவுபடுத்தல் போன்ற பல விடயங்கள் விரிவாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.


மீனவர்களின் பாதிப்பு தொடர்பிலான கலந்தாய்வு கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலைகளின் காரணமாக மீனவ சமூகம் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (15) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடல், பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள், மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பேரிடர் காரணமாக அழிக்கப்பட்ட படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்துதல், கோட்பே மீன்வளத் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க பாதுகாப்பை அதிகரித்தல், தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துதல், கோட்பே மீன்வளத் துறைமுகத்தை விரிவுபடுத்தல் போன்ற பல விடயங்கள் விரிவாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement