வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய ஆசிரியர்கள் தாமே பாடசாலை சூழலை சுத்தம் செய்து முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக புயல் மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டு நாளைய தினம் (16.12) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் அதிபர், ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் இன்று (15.12) பாடசாலைக்குச் சமூகளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
அதற்கு அமைவாக வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் , கல்விசாரா ஊழியர்கள் காலை 7.30 இற்கு பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.
இதனையடுத்து, அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் இணைந்து பாடசாலை வளாகத்தினை சிரமதானம் செய்து மாணவர்கள் நாளைய தினம் (16.12) கற்பதற்கான சூழலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
அதிபர், ஆசிரியர்களின் சிரமதான பணியினை பார்த்து காலை 10 மணியின் பின் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களும் மாணவர்களுடைய பெற்றோர்களும் ஆசிரியர்களுடைய செயற்பாட்டை பாராட்டி உள்ளதுடன் ஆசிரியர்களுடன் இணைந்து பின்னர் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் முன்மாதிரியாக செயற்பட்ட ஆசிரியர்கள் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய ஆசிரியர்கள் தாமே பாடசாலை சூழலை சுத்தம் செய்து முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார்கள்.குறிப்பாக புயல் மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டு நாளைய தினம் (16.12) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்நிலையில் அதிபர், ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் இன்று (15.12) பாடசாலைக்குச் சமூகளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.அதற்கு அமைவாக வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் , கல்விசாரா ஊழியர்கள் காலை 7.30 இற்கு பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.இதனையடுத்து, அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் இணைந்து பாடசாலை வளாகத்தினை சிரமதானம் செய்து மாணவர்கள் நாளைய தினம் (16.12) கற்பதற்கான சூழலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.அதிபர், ஆசிரியர்களின் சிரமதான பணியினை பார்த்து காலை 10 மணியின் பின் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களும் மாணவர்களுடைய பெற்றோர்களும் ஆசிரியர்களுடைய செயற்பாட்டை பாராட்டி உள்ளதுடன் ஆசிரியர்களுடன் இணைந்து பின்னர் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.