• Dec 06 2024

நல்லிணக்கத்தின் உண்மையான ஒற்றுமையை முன்னிறுத்தி ஈ.பி.டி.பி தேர்தலில் போட்டி- டக்ளஸ் சுட்டிக்காட்டு..!

Sharmi / Oct 25th 2024, 3:10 pm
image

நல்லிணக்கத்தின் அடிப்படையில்  அனைத்து மதங்களின் பிரதிநிதிகளும் திராவிட அரசியல் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கொழும்பில் இன்றையதினம்(25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் நல்லிணக்கத்தின் உண்மையான ஒற்றுமையை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும்,எமது கட்சியில் நான்கு மத குருமார்கள் தேர்தலில் போட்டியிடுவதை ஒரு சிலருக்கு அது வேதனையாக உள்ளது. அதுவே எமக்கு வெற்றி எனவும் தெரிவித்தார்.

இலங்கை இந்திய மீனவர் பிரதிநிதிகள் சந்திப்பு எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதற்கு முன்பாக நான் பல விடயங்கள் சம்பந்தமாக ஜனாதிபதியை சந்திக்கவுள்ளேன்.

அப்பொழுது பல பிரச்சனை சம்மதம் நான் அவரிடம் கலந்து ஆலோசிப்பேன். அதன்பின்பே அந்த கூட்டத்திற்கு நான் கலந்து கொள்ள இருக்கின்றேன். 

உதய கம்பன்பில ஒன்றை கூறுகிறார் மற்றவர் இன்னொன்று கூறுகிறார்கள்.  எது சரி எது தவறு என நான் அறிய இருவரும் கூறி முடித்த பின்பு அதில் அறிக்கையில் வந்த பின்பே அதற்கான பதிலை நான் கூறுவேன். 

எமது அணி நல்லிணக்கத்திற்காகவும் சமாதானத்துக்காகவும் ஒற்றுமைக்காகவே நோக்கமாக கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.





நல்லிணக்கத்தின் உண்மையான ஒற்றுமையை முன்னிறுத்தி ஈ.பி.டி.பி தேர்தலில் போட்டி- டக்ளஸ் சுட்டிக்காட்டு. நல்லிணக்கத்தின் அடிப்படையில்  அனைத்து மதங்களின் பிரதிநிதிகளும் திராவிட அரசியல் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.கொழும்பில் இன்றையதினம்(25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நாட்டில் தற்போது நிலவும் நல்லிணக்கத்தின் உண்மையான ஒற்றுமையை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும்,எமது கட்சியில் நான்கு மத குருமார்கள் தேர்தலில் போட்டியிடுவதை ஒரு சிலருக்கு அது வேதனையாக உள்ளது. அதுவே எமக்கு வெற்றி எனவும் தெரிவித்தார்.இலங்கை இந்திய மீனவர் பிரதிநிதிகள் சந்திப்பு எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.அதற்கு முன்பாக நான் பல விடயங்கள் சம்பந்தமாக ஜனாதிபதியை சந்திக்கவுள்ளேன்.அப்பொழுது பல பிரச்சனை சம்மதம் நான் அவரிடம் கலந்து ஆலோசிப்பேன். அதன்பின்பே அந்த கூட்டத்திற்கு நான் கலந்து கொள்ள இருக்கின்றேன். உதய கம்பன்பில ஒன்றை கூறுகிறார் மற்றவர் இன்னொன்று கூறுகிறார்கள்.  எது சரி எது தவறு என நான் அறிய இருவரும் கூறி முடித்த பின்பு அதில் அறிக்கையில் வந்த பின்பே அதற்கான பதிலை நான் கூறுவேன். எமது அணி நல்லிணக்கத்திற்காகவும் சமாதானத்துக்காகவும் ஒற்றுமைக்காகவே நோக்கமாக கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement