• Nov 26 2025

பாகிஸ்தானில் தொடரும் மக்களின் ஆர்ப்பாட்டம்; துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலி - 200க்கும் மேற்பட்டோர் காயம்!

shanuja / Oct 3rd 2025, 10:53 am
image

பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​ மக்கள் 38 கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போராட்​டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 


போராட்டம் வலுப்பெற போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர். 


துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள்  12 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 200 இற்கும் மேற்பட்டோர் குண்டுகாயம் அடைந்தனர். இதற்கிடையே போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3 பொலிஸார் உயிரிழந்தனர். 


ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை குழு ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்துள்ளார். 


எனினும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் தொடரும் மக்களின் ஆர்ப்பாட்டம்; துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலி - 200க்கும் மேற்பட்டோர் காயம் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​ மக்கள் 38 கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போராட்​டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டம் வலுப்பெற போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர். துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள்  12 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 200 இற்கும் மேற்பட்டோர் குண்டுகாயம் அடைந்தனர். இதற்கிடையே போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3 பொலிஸார் உயிரிழந்தனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை குழு ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்துள்ளார். எனினும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement