• Nov 26 2024

தொடரும் 'யுக்திய' நடவடிக்கை- 760 சந்தேக நபர்கள் கைது...!

Sharmi / Feb 20th 2024, 12:34 pm
image

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' நடவடிக்கையில் 760 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 630 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 130 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 760 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த சுற்றிவளைப்பில் 179 கிராம் ஹெரோயின், 139 கிராம் பனி, கஞ்சா 06 கிலோ 201 கிராம், மாவா 249 கிராம், துலே 104 கிராம், மதன மோதக 616 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 630 சந்தேக நபர்களில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் 15 சந்தேக நபர்களும், புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட 12 சந்தேக நபர்களும், சம்மன் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட 15 பேரும் அடங்குகின்றனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 130 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்குட்படுத்தப்பட்டவர்களில் 16 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்றவர்கள், 112 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்களுடன் தொடர்புடைய 112 பேர் மற்றும் குற்றங்களுக்காக தேடப்படும்  சந்தேக நபர்கள் 02 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடரும் 'யுக்திய' நடவடிக்கை- 760 சந்தேக நபர்கள் கைது. கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' நடவடிக்கையில் 760 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 630 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 130 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 760 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேவேளை குறித்த சுற்றிவளைப்பில் 179 கிராம் ஹெரோயின், 139 கிராம் பனி, கஞ்சா 06 கிலோ 201 கிராம், மாவா 249 கிராம், துலே 104 கிராம், மதன மோதக 616 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.அத்துடன், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 630 சந்தேக நபர்களில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் 15 சந்தேக நபர்களும், புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட 12 சந்தேக நபர்களும், சம்மன் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட 15 பேரும் அடங்குகின்றனர்.மேலும், கைது செய்யப்பட்ட 130 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்குட்படுத்தப்பட்டவர்களில் 16 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்றவர்கள், 112 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்களுடன் தொடர்புடைய 112 பேர் மற்றும் குற்றங்களுக்காக தேடப்படும்  சந்தேக நபர்கள் 02 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement