• Nov 23 2024

தொடரும் இந்திய மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம்...! கச்சத்தீவு திருவிழா பயணம் இரத்து...!தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை அறிவிப்பு...!

Sharmi / Feb 21st 2024, 1:15 pm
image

இலங்கை - இந்தியா இருநாட்டு மீனவர்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மீனவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக இந்த ஆண்டு இந்திய தரப்பிலிருந்து எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என வேர்க்கோடு  பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளார்.

 மேலும், வெளிமாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து கச்சதீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்தவர்கள் வீண் சிரமங்களை தவிர்க்க வேண்டும் எனவும், அவர்கள் விசைப்படக்கிற்கு செலுத்திய பணம் விரைவில் மீண்டும் வழங்கப்படும் என பங்குத் தந்தை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவுக்காக சுமார் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் எனவும் குறிப்பாக இந்தியாவிலிருந்து 3500 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக யாழில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



தொடரும் இந்திய மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம். கச்சத்தீவு திருவிழா பயணம் இரத்து.தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை அறிவிப்பு. இலங்கை - இந்தியா இருநாட்டு மீனவர்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மீனவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக இந்த ஆண்டு இந்திய தரப்பிலிருந்து எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என வேர்க்கோடு  பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளார். மேலும், வெளிமாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து கச்சதீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்தவர்கள் வீண் சிரமங்களை தவிர்க்க வேண்டும் எனவும், அவர்கள் விசைப்படக்கிற்கு செலுத்திய பணம் விரைவில் மீண்டும் வழங்கப்படும் என பங்குத் தந்தை தெரிவித்துள்ளார்.அதேவேளை, கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவுக்காக சுமார் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் எனவும் குறிப்பாக இந்தியாவிலிருந்து 3500 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக யாழில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement