• Sep 22 2024

தொடரும் காட்டு யானை - மனித மோதல் - கட்டுப்படுத்த நடவடிக்கையில்லை - பொதுமக்கள் விசனம்...!samugammedia

Anaath / Oct 15th 2023, 5:04 pm
image

Advertisement

சம்மாந்துறைப் பிரதேசத்தில்  காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதல் தொடர்ந்து கொண்டிருப்பதாக அம்பாறை மாவட்ட பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றும் கூட அதிகாலை   காட்டு யானை ஒன்று வீட்டு மதில்கள், கடை, பயன்தரும் வாழை மற்றும் மரவள்ளி மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

தமது வீட்டுச்சுவரையும், கடையையும் காட்டு யானை ஒன்று உடைத்துக் கொண்டிருப்பதனை அவதானித்த உரிமையாளர் அதனை விரட்டுவதற்கு முற்பட்டுள்ளார்.

இவ்வேளையில் காட்டு யானை தம்மை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் வீட்டுக்குத்திரும்பிய வேளையில் உயிரிழந்த சம்பவமொன்று சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தில் வயற்பிரதேசங்களை அண்மித்த பகுதியில் வாழும் பொதுமக்கள் இரவு வேளையில் காட்டு யானைகளின் தொல்லையால் அச்சமடைந்துள்ளனர்.

தினமும் இரவு வேளையில் காட்டு யானைகள் நடமாடிக் கொண்டிருப்பதாலும் பொதுமக்களையும், பயன் தரும் பயிர் மற்றும் மரங்களையும் தாக்கி சேதப்படுத்திக் கொண்டிருப்பதனாலும் இரவு வேளைகளில் நடமாடுவதற்கு அச்சமடைந்துள்ளனர்.

எனவே, காட்டு யானைகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரும் சம்மாந்துறை பிரதேச செயலகம், அதிகாரிகளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

சம்மாந்துறை பிரதேசத்தில் இவ்வருடத்தில் மாத்திரம் மூன்று பேர் காட்டு யானைகளின் தாக்குதலில் மரணமடைந்து, பலர் காயமடைந்துள்ளார்கள்.

காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை முன் வைத்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனப் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.


தொடரும் காட்டு யானை - மனித மோதல் - கட்டுப்படுத்த நடவடிக்கையில்லை - பொதுமக்கள் விசனம்.samugammedia சம்மாந்துறைப் பிரதேசத்தில்  காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதல் தொடர்ந்து கொண்டிருப்பதாக அம்பாறை மாவட்ட பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன்றும் கூட அதிகாலை   காட்டு யானை ஒன்று வீட்டு மதில்கள், கடை, பயன்தரும் வாழை மற்றும் மரவள்ளி மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.தமது வீட்டுச்சுவரையும், கடையையும் காட்டு யானை ஒன்று உடைத்துக் கொண்டிருப்பதனை அவதானித்த உரிமையாளர் அதனை விரட்டுவதற்கு முற்பட்டுள்ளார்.இவ்வேளையில் காட்டு யானை தம்மை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் வீட்டுக்குத்திரும்பிய வேளையில் உயிரிழந்த சம்பவமொன்று சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தில் வயற்பிரதேசங்களை அண்மித்த பகுதியில் வாழும் பொதுமக்கள் இரவு வேளையில் காட்டு யானைகளின் தொல்லையால் அச்சமடைந்துள்ளனர்.தினமும் இரவு வேளையில் காட்டு யானைகள் நடமாடிக் கொண்டிருப்பதாலும் பொதுமக்களையும், பயன் தரும் பயிர் மற்றும் மரங்களையும் தாக்கி சேதப்படுத்திக் கொண்டிருப்பதனாலும் இரவு வேளைகளில் நடமாடுவதற்கு அச்சமடைந்துள்ளனர்.எனவே, காட்டு யானைகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரும் சம்மாந்துறை பிரதேச செயலகம், அதிகாரிகளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.சம்மாந்துறை பிரதேசத்தில் இவ்வருடத்தில் மாத்திரம் மூன்று பேர் காட்டு யானைகளின் தாக்குதலில் மரணமடைந்து, பலர் காயமடைந்துள்ளார்கள்.காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை முன் வைத்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனப் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement