மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு தனது மூன்று வயது குழந்தையுடன் சென்ற இளம் தாய் ஒருவர் திடீரென காணாமல் போனார்.
மறுநாள் வெள்ளிக்கிழமை, அவர் நெல்லிக்காடு பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார்.
அவரது குழந்தை அருகில் உள்ள வயல் பகுதியில் அழுதுகொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அதிர்ச்சியளிக்கும் விதமாக, அதே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் வர்ணஜயசுந்தர மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன ஆகியோரின் வழிகாட்டலில், விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
CCTV காட்சிகளின் உதவியுடன் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி அடையாளம் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காஞ்சிரங்குடா, வேர்க்கண்டசேனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து கணவன், மனைவி மற்றும் கணவனின் சகோதரன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் திருடப்பட்ட நகைகளை வாங்கிய மற்றும் அடகு பிடித்த இரண்டு நகைக்கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பலதெரியவந்துள்ளது.
பேருந்துக்காக காத்திருக்கும் பெண்களை இலக்கு வைத்து, தாங்களும் அதே இடத்திற்குச் செல்வதாகக் கூறி முச்சக்கர வண்டியில் ஏற்றியுள்ளனர்.
பயணத்தின் போது மயக்க மருந்து கலந்த குளிர்பானம் அல்லது பழச்சாறு கொடுத்து பெண்களை மயக்கமடையச் செய்துள்ளனர்.
மயக்கமடைந்த பெண்களின் தாலிக்கொடிகள் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்த பின், அவர்களைப் பாழடைந்த கிணற்றில் வீசிச் சென்றுள்ளனர்.
கடந்த மாதம் 28ஆம் திகதி, களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரை இதே பாணியில் கடத்தி, 7 பவுண் தாலிக்கொடியைப் பறித்துவிட்டு கிணற்றில் வீசியுள்ளனர். அந்தப் பெண்ணே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவர் எனத் தெரியவருகிறது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்று கார் ஒன்றையும் இவர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று பெண்ணிடம் நகைகளைப் பறித்த சம்பவத்துடனும் இவர்களுக்குத் தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கார் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒரு மோட்டார் சைக்கிள்
வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கடைசியாகக் கொள்ளையடிக்கப்பட்ட பெண்ணின் தாலிக்கொடி பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஐவரையும் நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் தொடர் கொள்ளை மற்றும் கடத்தல்: சிக்குண்ட ஐவர் கொண்ட கும்பல் மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு தனது மூன்று வயது குழந்தையுடன் சென்ற இளம் தாய் ஒருவர் திடீரென காணாமல் போனார். மறுநாள் வெள்ளிக்கிழமை, அவர் நெல்லிக்காடு பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார். அவரது குழந்தை அருகில் உள்ள வயல் பகுதியில் அழுதுகொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதிர்ச்சியளிக்கும் விதமாக, அதே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் வர்ணஜயசுந்தர மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன ஆகியோரின் வழிகாட்டலில், விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.CCTV காட்சிகளின் உதவியுடன் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி அடையாளம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிரங்குடா, வேர்க்கண்டசேனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து கணவன், மனைவி மற்றும் கணவனின் சகோதரன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் திருடப்பட்ட நகைகளை வாங்கிய மற்றும் அடகு பிடித்த இரண்டு நகைக்கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பலதெரியவந்துள்ளது.பேருந்துக்காக காத்திருக்கும் பெண்களை இலக்கு வைத்து, தாங்களும் அதே இடத்திற்குச் செல்வதாகக் கூறி முச்சக்கர வண்டியில் ஏற்றியுள்ளனர்.பயணத்தின் போது மயக்க மருந்து கலந்த குளிர்பானம் அல்லது பழச்சாறு கொடுத்து பெண்களை மயக்கமடையச் செய்துள்ளனர்.மயக்கமடைந்த பெண்களின் தாலிக்கொடிகள் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்த பின், அவர்களைப் பாழடைந்த கிணற்றில் வீசிச் சென்றுள்ளனர்.கடந்த மாதம் 28ஆம் திகதி, களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரை இதே பாணியில் கடத்தி, 7 பவுண் தாலிக்கொடியைப் பறித்துவிட்டு கிணற்றில் வீசியுள்ளனர். அந்தப் பெண்ணே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவர் எனத் தெரியவருகிறது.கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்று கார் ஒன்றையும் இவர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.கடந்த பிப்ரவரி மாதம் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று பெண்ணிடம் நகைகளைப் பறித்த சம்பவத்துடனும் இவர்களுக்குத் தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கார் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒரு மோட்டார் சைக்கிள்வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கடைசியாகக் கொள்ளையடிக்கப்பட்ட பெண்ணின் தாலிக்கொடி பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட ஐவரையும் நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.